அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு.. யார் அந்த உரிமையாளர்?.. வெளியான அதிர்ச்சி தகவல்
இசையமைப்பாளர் இளையராஜா அஜித் படம் மீது வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியிருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் நாட்டுப்புறபாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் இடம்பெற்றிருந்தது. இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியான நேரத்தில் இந்த பாடல் தொடர்பாக இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு ஆதரவாக அவரது தம்பி கங்கை அமரனும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இளையராஜாவிற்கு வயித்தெரிச்சல்
அதே நேரத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் இளையராஜாவிற்கு இப்போது மார்க்கெட் இல்லை. குறைந்த சம்பளம் பெறுகிறார். ஜி.வி.பிரகாஷ் அதிக சம்பளம் பெறுவது அவருக்கு வயித்தெரிச்சல் என பேசியது சர்ச்சையானது. மேலும், ஒத்த ரூபா தாரேன் பாடல் படத்தில் இடம்பெற சட்டரீதியாக அனுமதி பெற்றதாகவும் குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
யார் அந்த உரிமையாளர்?
அதில், குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது. மேலும், உரிமை பெற்றதாக கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கானது வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.






















