மேலும் அறிய
Oats paniyaaram recipe : குழி பணியாரம் சாப்பிடனும் போல இருக்கா? இந்த புதிய ஓட்ஸ் பணியாரத்தை வீட்டில் செய்து அசத்துங்கள்!
ஓட்ஸ் பணியாரம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறது ரெசிபி..வீட்டில் செய்து அசத்துங்கள்!

ஓட்ஸ் பணியாரம்
1/6

ங்கள் விதவிதமான பணியாரங்கள் சாப்பிட்டிருப்பீர்கள்! ஆனால் ஓட்ஸ் வைத்து செய்யப்படும் ஓட்ஸ் பணியாரம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறது ரெசிபி..வீட்டில் செய்து அசத்துங்கள்!
2/6

தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 1 கப், தண்ணீர் - 1 1/2 கப், வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய் - நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கேரட் - 1 துருவியது, வேகவைத்த பட்டாணி, முட்டைகோஸ் துருவியது, சீரகம் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது.
3/6

செய்முறை: முதலில் ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவிடவும். பின்பு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், வேகவைத்த பட்டாணி, துருவிய முட்டைகோஸ் சேர்க்கவும்.
4/6

அடுத்து சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
5/6

அடுத்து பணியாரக்கல்லில் நெய் ஊற்றி பின்பு மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
6/6

அவ்வளவு தான் சுட சுட ஓட்ஸ் பணியாரம் தயார்!
Published at : 25 May 2023 05:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement