நெகட்டிவ் விமர்சனம் சொல்லக் கூடாதா..!சன் பிக்ச்சர்ஸ் பண்ணது கேவலமான செயல்..யூடியுபர் ஆதங்கம்
கூலி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் தெரிவித்ததால் பிரபல யூடியுபர் இட்ஸ் பிரசாந்தின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளது சன் பிக்ச்சர்ஸ்

கூலி
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விமர்சகர்களும் இப்படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்களையே வழங்கியுள்ளார்கள். பிரபல் யூடியுபர் மற்றும் சினிமா ஆர்வலரான இட்ஸ் பிரசாந்த் கூலி படத்திற்கு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விமர்சனத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
" கூலி படத்தின் விமர்சனத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தேன். திடீரென்று பார்த்தால் அந்த ரீல்ஸ் டிலீட் ஆகியிருந்தது. அந்த வீடியோவில் பயண்படுத்தி இருந்ததால் அந்த வீடியோவை ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது என்ன சூரியனைப் பார்த்து நாய் குரைக்கும் கதையாக இருக்கிறது. ஒரு சின்ன வீடியோவால் உங்கள் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமா? ஆனால் இவர்கள்தான் படத்தில் சன் பிக்ச்சர்ஸ் ஜனநாயகம் பேசுகிறார்கள். கமல் நடித்த இந்தியன் 2 படத்தை எல்லாம் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஆனால் அதை படக்குழு ஏற்றுக் கொண்டது. ஆனால் இங்கே அவர்கள் பாட்டை பயன்படுத்தியதற்காக என் வீடியோவை ரிப்போர்ட் கொடுக்கிறார்கள். உங்கள் படத்தை ப்ரோமோட் செய்வதற்காக மட்டும் நாங்கள் இந்த பாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் . ஆனால் இன்று படம் சுமாராக இருக்கிறது. இத்தனை கதாபாத்திரங்கள் தேவையே இல்லை. படத்திற்கு ஏன் A சான்றிதழ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பினால் அந்த வீடியோவை நீக்குகிறார்கள். சின்ன ஊர்களில் அதிகப்படியான டிக்கெட் விலை வைத்து விற்க சொல்லி மோனோபாலி செய்திருக்கிறார்கள். படம் மோசமாக இருந்தால் அதை சொல்லிதான் ஆகவேண்டும் . படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை கேள்வி கேட்டால் பேன் பன்றாங்கள். இது அசிங்கமாக இல்லையா. கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள். கூலி ஒரு மோசமான படம்தான். ரஜினி சாருக்கு இது ஒரு கெட்ட கனவு" என அவர் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்
Silencing critics won’t save Coolie.
— Syed (@syedfromdubai) August 15, 2025
You may counter criticize a critique but Sun Pictures flexing political power to erase reviews is an insult to free speech.
If Coolie can’t survive criticism, maybe the problem isn’t the critic, it’s the movie!
pic.twitter.com/7ndjXavYbC
இதேபோல் படத்தை விமர்சித்து வெளியிட்ட பல பதிவுகளையும் விடியோக்களையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்





















