மேலும் அறிய
Corn Cutlet Recipe : சோளம் இருந்தால் போதும்.. மொறுமொறுப்பான கார்ன் கட்லெட்டை செய்து விடலாம்!
Corn Cutlet Recipe : எப்போதும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு சலிப்பு தட்டி இருந்தால், இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.
![Corn Cutlet Recipe : எப்போதும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு சலிப்பு தட்டி இருந்தால், இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/994f72402cb29964f292a8e05148a9c51714200959566572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்ன் கட்லெட்
1/6
![கார்ன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் - 2 வேகவைத்தது, வெங்காயம் - 1 நறுக்கியது, குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, கேரட் - 1 துருவியது, இஞ்சி - 1 துண்டு துருவியது, பூண்டு - 6 பற்கள், பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 தேக்கரண்டி, கடலை மாவு -1 கப், அரிசி மாவு - 1/4 கப், கொத்தமல்லி இலை, எண்ணெய் - பொரிப்பதற்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/0c01b9d11b88b3684a1859110932922445035.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்ன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் - 2 வேகவைத்தது, வெங்காயம் - 1 நறுக்கியது, குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, கேரட் - 1 துருவியது, இஞ்சி - 1 துண்டு துருவியது, பூண்டு - 6 பற்கள், பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 தேக்கரண்டி, கடலை மாவு -1 கப், அரிசி மாவு - 1/4 கப், கொத்தமல்லி இலை, எண்ணெய் - பொரிப்பதற்கு
2/6
![செய்முறை விளக்கம் : சமைத்த ஸ்வீட் கார்னை மிக்சி ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய கேரட், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/bccd5059563dd77fcb3d2a6dfee7310a8f74e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை விளக்கம் : சமைத்த ஸ்வீட் கார்னை மிக்சி ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய கேரட், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
3/6
![அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், பெருங்காய தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் தூள், கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து மாவை நன்கு கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/fe98a5a09a7f92dedc0099b279d4753c660bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், பெருங்காய தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் தூள், கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து மாவை நன்கு கலக்கவும்.
4/6
![உள்ளங்கைகளுக்கு எண்ணெய் தடவி, ஸ்வீட் கார்ன் கலவையை எடுத்து கட்லெட் வடிவில் தட்டி கொள்ளவும். அனைத்து கட்லெட்டுகளையும் ஒரே அளவில் தயார் செய்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/6392f691ed311a1cf9e9768f40d4fc8f980cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உள்ளங்கைகளுக்கு எண்ணெய் தடவி, ஸ்வீட் கார்ன் கலவையை எடுத்து கட்லெட் வடிவில் தட்டி கொள்ளவும். அனைத்து கட்லெட்டுகளையும் ஒரே அளவில் தயார் செய்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றவும்.
5/6
![எண்ணெயை சூடாக்கி, தயாரிக்கப்பட்ட கட்லெட்டுகளை மெதுவாக விடுங்கள். தீயை மிதமான அளவில் வைத்து இருபுறமும் கட்லெட்டுகளை வறுக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/2475168d4550a65834eebb76cfc465594e295.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எண்ணெயை சூடாக்கி, தயாரிக்கப்பட்ட கட்லெட்டுகளை மெதுவாக விடுங்கள். தீயை மிதமான அளவில் வைத்து இருபுறமும் கட்லெட்டுகளை வறுக்கவும்.
6/6
![கட்லெட்டுகள் பொன்னிறமாக மாறியதும், அவற்றை கடாயில் இருந்து அகற்றி, தக்காளி கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறலாம்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/288bcb1f7d453a42c446c8d42be8f6debbbc2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கட்லெட்டுகள் பொன்னிறமாக மாறியதும், அவற்றை கடாயில் இருந்து அகற்றி, தக்காளி கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறலாம்,
Published at : 27 Apr 2024 12:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பட்ஜெட் 2025
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion