மேலும் அறிய
Diwali Snacks Recipe: ஆரோக்கியமான கருப்புகவுனி அரிசி முறுக்கு..செய்வது எப்படி?
கருப்புகவுனி அரிசி தேங்காய்ப் பால் முறுக்கு செய்முறை எப்படி என்று காணலாம்.
கருப்புகவுனி அரிசி முறுக்கு
1/5

தீபவாளி சமையத்தில் ஆரோக்கியமான ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கருப்புகவுனி அரிசி வைத்து முறுக்கு எப்படி செய்வது எனக் காணலாம்.
2/5

தேவையான பொருட்கள் கருப்புகவுனி அரிசி - 1 கிலோ பொட்டு கடலை - 1/2 கிலோ தேங்காய்ப் பால் -100மி.லி. மிளகாய்த்தூள் - 30 கிராம் ஓமம் - 4 டேபிள் ஸ்பூன் எள் - 5 டேபிள் ஸ்பூன் நெய் -50 மி.லி . உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1லி.
3/5

கருப்புகவுனி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து பொட்டு கடலை சேர்த்து நைசாக அரைத் துக் கொள்ளவும்.
4/5

ஓமம், எள், உப்பு நெய், மிளகாய்த்தூள் மற்றும் தேங் காய்ப் பால் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு சுடும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5/5

பிறகு வாணலி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு பிழியும் குழாயில் மாவை போட்டு ஒவ்வொரு முறுக்காக பிழிந்து எடுக்கவும். சுவையான கருப்புகவுனி அரிசி தேங்காய்ப் பால் முறுக்கு தயார்
Published at : 02 Nov 2024 08:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















