மேலும் அறிய

OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!

திமுக-வில் கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விருப்பமனு தாக்கல் செய்திருப்பது கட்சியினருக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக-வில் இணைந்தார். 

ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சீட்டா?

ஜெயலலிதாவின் விசுவாசி, அம்மாவின் உண்மைத் தொண்டன் என அதிமுக தொண்டர்களால் கருதப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்தது பேரதிர்ச்சியை அதிமுக-வினருக்கு ஏற்படுத்தியது. தனது மற்றும் தனது மகனின் அரசியல் எதிர்காலம் கருதியே அவர் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட போடிநாயக்கனூர் தொகுதியிலும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர், மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போட்டியிட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. அவரது செல்வாக்கில் அவரது மகனுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது.

அப்செட்டில் தேனி மாவட்ட திமுக:

இது தேனி மாவட்ட திமுக-வினர் இடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. தேனி மாவட்டம் என்பது எம்ஜிஆர் காலம் முதலே அதிமுக-வின் கோட்டையாகவே இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்பும் இரட்டை இலையின் செல்வாக்கு தேனி மாவட்டத்தில் பெரியளவிலே இருந்து வருகிறது. 

இதனால், கடந்த அரைநூற்றாண்டு காலமாக செல்வாக்கு மிகுந்த அதிமுக-விற்கு எதிராக திமுகவினர் பலரும் கடினமாக கட்சிப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், வரும் தேர்தலில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பல காலமாக திமுக-வில் இருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால், திடீரென கட்சியில் இருந்து கட்சி மாறி வந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனும் விருப்பமனு தாக்கல் செய்திருப்பது பல காலமாக திமுக-வில் இருக்கும் தேனி மாவட்டத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செய்யப்போகிறது திமுக தலைமை?

கட்சித் தலைமையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனுக்கு போட்டியிடவே வாய்ப்பு வழங்கும் என்று கருதப்படுவதால் அவர்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கே தேனி மாவட்ட திமுக-வில் அதிருப்தி உண்டாகியது. 

தற்போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்த அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. இதை கட்சித் தலைமை எப்படி சரி செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக-வைப் பொறுத்தமட்டில் பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் மிக எளிதாக வழங்கப்படுவதாகவும், கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெயப்பிரகாஷ் உடல் உறுப்புகள் தானம், அரசு மரியாதை!
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெயப்பிரகாஷ் உடல் உறுப்புகள் தானம், அரசு மரியாதை!
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! 3 மாவட்டங்களில் இன்று, 4-ல் நாளை: எங்கெங்கு என வானிலை அறிக்கையில் தகவல்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! 3 மாவட்டங்களில் இன்று, 4-ல் நாளை: எங்கெங்கு என வானிலை அறிக்கையில் தகவல்
TN Election 2026 | வெற்றி பெற்ற பின்.... மதுரையில் வீடெடுத்து தங்குவேன் - இயக்குநர் சுந்தர் சி உறுதி !
TN Election 2026 | வெற்றி பெற்ற பின்.... மதுரையில் வீடெடுத்து தங்குவேன் - இயக்குநர் சுந்தர் சி உறுதி !
மாணவர் கையில் மதுக்கோப்பை... இதுதான் திராவிட மாடலா? - சீறும் அன்புமணி இராமதாஸ்!
மாணவர் கையில் மதுக்கோப்பை... இதுதான் திராவிட மாடலா? - சீறும் அன்புமணி இராமதாஸ்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
Annamalai: போட்டியிட சீட் இல்லை.!
போட்டியிட சீட் இல்லை.! "மே 4-க்கு அப்புறம் பேசுவோம்“; அதிருப்தியில் அண்ணாமலை.? பாஜகவில் நடப்பது என்ன.?
Iran War Kuwait Hit: குவைத் எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை மீது அட்டாக்; சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்; கலக்கத்தில் அரபு நாடுகள்
குவைத் எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை மீது அட்டாக்; சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்; கலக்கத்தில் அரபு நாடுகள்
Mahindra Price Hike: SUV பிரியர்கள் ஷாக்..! மொத்தமாக விலையை உயர்த்திய மஹிந்த்ரா - எந்த காருக்கு எவ்வளவு?
Mahindra Price Hike: SUV பிரியர்கள் ஷாக்..! மொத்தமாக விலையை உயர்த்திய மஹிந்த்ரா - எந்த காருக்கு எவ்வளவு?
GOLD SILVER RATE Apr. 4th: போச்சுடா.! மறுபடியும் ஏறுமுகத்துக்கு போய்ட்டியா.? தங்கம் விலை இன்றும் உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
போச்சுடா.! மறுபடியும் ஏறுமுகத்துக்கு போய்ட்டியா.? தங்கம் விலை இன்றும் உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
Fronx, Nexon, Exter EMI Plan: மாருதி ஃபிரான்க்ஸ், டாடா நெக்ஸான், ஹூண்டாய் எக்ஸ்டர்; எந்த கார EMI-ல வாங்குனா மலிவா இருக்கும் தெரியுமா.?
மாருதி ஃபிரான்க்ஸ், டாடா நெக்ஸான், ஹூண்டாய் எக்ஸ்டர்; எந்த கார EMI-ல வாங்குனா மலிவா இருக்கும் தெரியுமா.?
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
Embed widget