மேலும் அறிய

Trump Vs Britain: “உங்க உதவி இப்போ தேவையில்ல, ஆனா நீங்க மறுத்தத மைண்ட்ல வச்சுருப்போம்“; பிரிட்டனை வெளுத்த ட்ரம்ப்

ஈரான் போரில் உதவ விமானம் தாங்கி கப்பல்களை அனுப்ப பிரிட்டன் முன்வந்த நிலையில், அதனை மறுத்து, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் என்ன கூறினார்.?

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்திவரும் அமெரிக்கா, முன்னர் பிரிட்டனிடம் ராணுவ தளங்களை தருமாறு கேட்டபோது அதனை அவர்கள் மறுத்தனர். இந்த நிலையில், தற்போது நடைபெறும் போரில்  அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு உதவுவதற்காக விமானம் தாங்கி கப்பல்களை அனுப்ப பிரிட்டன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்து, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் கூறியுள்ள என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

பிரிட்டனை விமர்சிக்கும் ட்ரம்ப்பின் பதிவு என்ன.?

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடான, அனைத்திலும் சிறந்ததாக இருந்த பிரிட்டன், இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. அது சரி, பிரதமர் ஸ்டார்மர், எங்களுக்கு இனி அவை தேவையில்லை. ஆனால் நாங்கள் நினைவில் கொள்வோம். நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட போரில் இணைபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை!“ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவிற்கு ராணுவ தளத்தை மறுத்த பிரிட்டன்

முன்னதாக, போர் தொடங்குவதற்கு முன், ஈரானை தாக்குவதற்கு ஏதுவாக, பிரிட்டனின் ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி கேட்டது அமெரிக்கா. ஆனால், பிரிட்டன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்திய பெருங்கடலில் டியாகோ கார்சியாவில் ராணுவ தளத்தை வைத்துள்ளது பிரிட்டன். இந்த ராணுவ தளம், கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதை எளிதாக்கும். அதனால், அந்த ராணுவ தளத்தை பிரிட்டனிடம் கேட்டுள்ளது அமெரிக்கா.

ஆனால், சர்வதேச சட்டம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை கருத்தில் கொண்டு, அந்த தளத்தை வழங்க முடியாது என்று பிரிட்டன் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும், ஈரான் மீது முக்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்துவது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று கூறி, ஸ்விண்டன் அருகே உள்ள விமானப்படை தளத்தை கெடுக்கவும் பிரிட்டன் மறுத்தது.

அமெரிக்கா-பிரிட்டன் இடையே மோதல் போக்கு

மொரீஷியஸிடம் சாகோஸ் தீவுகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர்களுக்குள் மோதல் போக்கு நிலவியது. எனினும், பிப்ரவரி 17-ம் தேதி, பிரிட்டன் பிரதமர் கெர் ஸ்டார்மருடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, ஈரானை தாக்க பிரிட்டனின் ராணுவ தளத்தை பயன்படுத்த ட்ரம்ப் அனுமதி கோரினாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அதன் பிறகுதான், பிரிட்டன் ராணுவ தளத்தை வழங்க மறுத்ததாக செய்தி வெளியானது.

இதனால் ட்ரம்ப் கோபமடைந்த நிலையில், பிரிட்டனுடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் தான், தற்போது விமானம் தாங்கி கப்பலை அனுப்ப முன்வந்த பிரிட்டனின் உதவியை ஏற்க ட்ரம்ப் மறுத்துள்ளார். அதோடு, அவர்கள் செய்ததை ஞாபகம் வைத்திருப்பேன் என்று வேறு கூறியுள்ளார். இதனால், எதிர்காலத்தில் பிரிட்டனுடன் அமெரிக்கா மோதல் போக்கையே கடைபிடிக்கும் என்பது தெளிவாகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Embed widget