TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்காக அறிவித்த அண்ணன் சீர் திட்டத்தின்போது பல பெண்களும் மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம் ஆகும். வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதை பெண்கள் வாக்குகளே தீர்மானிக்க உள்ளது.
அண்ணன் சீர்:
இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் விஜய்க்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வாக்குகளை கவரும் விதமாக பல்வேறு திட்டங்களை வாக்குறுதிகளாக இன்று விஜய் வெளியிட்டார்.
இதில் அண்ணன் சீர் என்ற திட்டத்தை விஜய் வெளியிட்டார். இந்த திட்டத்தின்படி, தங்கைகளின் திருமணத்திற்காக 8 கிராம் ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீராக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கண்ணீர் வடித்த பெண்கள்:
பெண்கள் கண்ணீர் விடுறாங்க 😍
— Prasanna OG (@OGprasanna) March 7, 2026
வெற்றி தலைவாஆ 🙏 pic.twitter.com/R3xXVLK9jV
விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது பெண்கள் அங்கே கூடியிருந்த பெண்கள் ஆர்ப்பரித்தனர். விஜய் அண்ணன் வீட்டு சீர் என்று அறிவித்தவுடன் அங்கே கூடியிருந்த பெண்கள் பலரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகளவு பெண் ரசிகைகளையும், குடும்ப ரசிகர்களையும் கொண்ட நடிகராக விஜய் உள்ளார். அவர் திரையுலகில் மிகப்பெரிய நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இவர்களே உள்ளனர்.
மகளிர் வாக்குகள்:
இதனால், வரும் தேர்தலிலும் அவரது வாக்கு சதவீதத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்று மாமல்லபுரத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்கியுள்ள விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அனைத்து பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம், ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர், புதியதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மகளிர் பாதுகாப்பிற்காக புதிய பாதுகாப்பு குழு, அஞ்சலை அம்மாள் நீதிமன்றம் என மொத்தம் 12 அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார்.























