மேலும் அறிய
Mutton Gravy Recipe : மூக்கை துளைக்கும் பாட்டி வீட்டு ஸ்டைல் மட்டன் கிரேவி செய்வது எப்படி?
Mutton Gravy Recipe : இந்த ரெசிபி, சிறுவயதில் பாட்டி கையால் செய்யப்பட்ட மட்டன் கிரேவியின் சுவையை நினைவுக்கு கொண்டு வரும் அளவிற்கு இருக்கும்.
![Mutton Gravy Recipe : இந்த ரெசிபி, சிறுவயதில் பாட்டி கையால் செய்யப்பட்ட மட்டன் கிரேவியின் சுவையை நினைவுக்கு கொண்டு வரும் அளவிற்கு இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/aff134f3c28c579981af4bcabaa30e731714471163778501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மட்டன் கிரேவி
1/6
![தேவையான பொருட்கள் : 500 கிராம் மட்டன் எலும்பு இல்லாதது, 4 பெரிய வெங்காயம் அரைத்த விழுது, 2 தக்காளி அரைத்த விழுது, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மல்லி சீரகம், மிளகுத்தூள் அரைத்த பொடி, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, 50 மிலி நல்லெண்ணெய், கொஞ்சம் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/755b5cd785cdeac4cb678d5054e10e825d32d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : 500 கிராம் மட்டன் எலும்பு இல்லாதது, 4 பெரிய வெங்காயம் அரைத்த விழுது, 2 தக்காளி அரைத்த விழுது, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மல்லி சீரகம், மிளகுத்தூள் அரைத்த பொடி, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, 50 மிலி நல்லெண்ணெய், கொஞ்சம் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை
2/6
![செய்முறை : மட்டன் துண்டுகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் போட்டு பச்சை மனம் போகும் வரை வதக்கவும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/d7193f6b51a3cc21599684bdebc14e23b8b14.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : மட்டன் துண்டுகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் போட்டு பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
3/6
![நன்கு வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி விழுதை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். நன்றாக வதங்கிய பின் கழுவி வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/4ce31f657bcb75a930ae52a57c3a8b0c477fd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நன்கு வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி விழுதை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். நன்றாக வதங்கிய பின் கழுவி வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.
4/6
![அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/b1487fd2707b96299404f9f53aadf3f66594c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
5/6
![10 நிமிடங்கள் நன்றாக கிளறிய பிறகு மல்லி, சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிடுங்கள். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறிவிடவும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/91d1c509de62c5ef019dee63d62f72ad60760.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
10 நிமிடங்கள் நன்றாக கிளறிய பிறகு மல்லி, சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிடுங்கள். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறிவிடவும்
6/6
![அதன் பிறகு சிறு தீயில் குக்கரை வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கினால் சுவையான பாட்டி வீடு மட்டன் கிரேவி ரெடி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/07d78957b05641914117f96e72b72bdd7e647.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு சிறு தீயில் குக்கரை வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கினால் சுவையான பாட்டி வீடு மட்டன் கிரேவி ரெடி.
Published at : 30 Apr 2024 04:56 PM (IST)
Tags :
South Indian Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion