டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் எக்ஸ்-ஷோரூம் விலை 18.48 லட்சம் முதல் 31.30 லட்சம் வரை நீள்கிறது. ஆன்-ரோடு விலை மாநில வரிகளைப் பொறுத்து மாறுபடும்.
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova HycrossEMI Scheme:டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலை வெறும் ரூ.1.89 லட்சத்தை முன்பணமாக செலுத்துவதன் மூலம், சொந்தமாக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

- டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் EMI திட்டத்தில் வாங்கலாம்.
- ரூ.2 லட்சம் முன்பணம் மற்றும் 4 வருட கடனில் EMI குறையும்.
- 9% வட்டி விகிதத்தில் மாத EMI ரூ.48,520 முதல் தொடங்கும்.
- பெட்ரோல், ஹைப்ரிட் இன்ஜின் விருப்பங்களில் கார் கிடைக்கிறது.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்:
இன்னோவா ஹைக்ராஸ் - EMI திட்டம்

ரூ.2 லட்சத்தில் ஹைக்ராஸை சொந்தமாக்குவது எப்படி?
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்?
கார் கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப 7 ஆண்டுகள் வரையிலும் நீட்டித்துக் கொள்ளலாம். செலுத்திய முன்பணம் மற்றும் தேர்வு செய்த கால அவகாசத்தை பொறுத்து நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணை தொகை மாறுபடும். நீங்கள் இந்த காரை ரூ.2 லட்சத்தை முன்பணமாக செலுத்தி 4 வருட கடனில் வாங்கினால், 9 சதவிகித வட்டி விகிதத்தில் மாதத்திற்கு சுமார் ரூ.48,520 மாதாந்திர தவணை செலுத்த வேண்டி இருக்கும். அதுவே கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக தேர்வு செய்தால் மாதாந்திர தவணை சுமார் ரூ.40,474 ஆக இருக்கும். 6 வருட கடனுக்கு தோராயமாக சுமார் 35,145ரூபாயும், 7 வருட கடனுக்கு சுமார் 31,370 ரூபாயையும் நீங்கள் மாதாந்திர தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அதிக முன்பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் மாதாந்திர தவணை தொகைகளை வெகுவாக குறைக்கலாம்.

இன்னோவா ஹைக்ராஸ் - இன்ஜின், போட்டியாளர்கள்
இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலில் 2.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு சுமார் 16 கிலோ மீட்டரும், ஹைப்ரிட் எடிஷன் லிட்டருக்கு சுமார் 23 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் எடிஷனானது 10.6 விநாடிகளிலேயே பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலானது, உள்நாட்டில் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, கியா காரன்ஸ் மற்றும் மாருதி சுசூகி இன்விக்டோஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
Frequently Asked Questions
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை என்ன?
இன்னோவா ஹைக்ராஸ் காரை EMI முறையில் வாங்க முடியுமா?
ஆம், இன்னோவா ஹைக்ராஸ் காரை மாதாந்திர தவணை (EMI) அடிப்படையில் வாங்க முடியும். முழு கட்டணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்தி இன்னோவா ஹைக்ராஸ் வாங்கினால், 4 வருட EMI எவ்வளவு இருக்கும்?
ரூ.2 லட்சம் முன்பணம் மற்றும் 9% வட்டி விகிதத்தில் 4 வருட EMI சுமார் ரூ.48,520 ஆக இருக்கும்.
இன்னோவா ஹைக்ராஸ் எந்தெந்த இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது?
இன்னோவா ஹைக்ராஸ் 2.0 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























