மேலும் அறிய
Tamil Movie Updates : ராகவா லாரன்ஸ் உடன் மீண்டும் இணையும் எஸ் ஜே சூர்யா!
Tamil Movie Updates : ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முதன் முதலில் இணைந்தனர். இந்த கூட்டணி பென்ஸ் படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளது.

தமிழ் சினிமா செய்திகள்
1/5

பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் பஹத் பாசில் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2/5

திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ள ஒன் டூ ஒன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3/5

மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்தில் துரு விக்ரம் நடித்து வருகிறார். தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைத்துள்ளது என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
4/5

சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தை எம் ஆர் மாதவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் டைனோசர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
5/5

அருள்நிதி நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபு ஜெயராம் இயக்கவுள்ளார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபு ஜெயராம் இதற்கு முன் “என்னங்க சார் உங்க சட்டம்” என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Jun 2024 01:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement