மேலும் அறிய
Uyir Ulag Birthday : அதுக்குள்ள ஒரு வருடம் ஆயிடுச்சா? மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் கோலிவுட்டின் க்யூட் ஜோடி!
Uyir Ulag Birthday : 27 ஆம் தேதியன்று பிறந்த உயிர் மற்றும் உலகின் முதல் பிறந்தநாளையொட்டி விக்கி- நயன் இன்ஸ்டாவில் வாழ்த்தியுள்ளனர்.

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
1/6

கோலிவுட்டின் பிரபல ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரவிற்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
2/6

கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர்
3/6

வாடகைத்தாய் மூலமாக இக்குழந்தைகள் பிறந்த நிலையில், கடும் சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் சட்டத்தின்படியே இருவரும் நடந்துக் கொண்டதாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
4/6

குழந்தைகளுடன் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடும் இந்த ஜோடி முகத்தை சரியாக காட்டாததால் ரசிகர்கள் ஃபீல் செய்தனர். இந்நிலையில் முதல்முறையாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் இரட்டை குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டியுள்ளனர்.
5/6

27 ஆம் தேதியன்று பிறந்த அவர்களின் முதல் பிறந்தநாளையொட்டி விக்கி- நயன் இன்ஸ்டாவில் வாழ்த்தியுள்ளனர்
6/6

“என் முகம் கொண்ட .. என் உயிர் என் குணம் கொண்ட.. என் உலக் இந்த வரிகளையும் நம்முடைய படங்களையும் ஒன்றாக இடுகையிட நீண்ட நேரம் காத்திருந்தேன் என் அன்பு மகன்களே.. என் அன்பு மகன்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அப்பாவும் அம்மாவும் வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு உங்கள் இருவரையும் நேசிக்கிறோம். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் வந்து அதை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றியதற்கு நன்றி. நீங்கள் அனைத்து நேர்மறையான எண்ணங்களையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள். இந்த ஓராண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரப்பப்பட்டுள்ளது. லவ் யூ மகன்களே..! ” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published at : 27 Sep 2023 10:58 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement