மேலும் அறிய

Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி

Anbumani Vs Ramadoss : 87 வயது ஆகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.கவின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. இதை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழி நடத்துவதாக அன்புமணி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் பாமக

தமிழக அரசியலில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் கட்சியாக வட மாவட்டங்களில் கெத்து காட்டிய கட்சி பாமக,  வட மாவட்டங்களில் எம்எல்ஏ அல்லது எம்பி வெற்றி பெறுவதாக இருந்தால் பாமகவின் உதவி கட்டாய தேவையாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் பாமக பின்தங்கியது. இந்த நிலையில் தான் அடுத்த திருப்பமாக பாமகவில் தந்தை - மகன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாமக நிர்வாகிகள் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளனர். ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டு வருகின்றனர். 

பாமக யாருக்கு சொந்தம்.?

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சி யாருக்கு.?  சின்னம் யாருக்கு என்ற போட்டியானது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்திற்கு பாமக தொடர்பான வழக்கு சென்றுள்ளது. பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி தர்மபிரபு முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது,  அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ராமதாஸ் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ராமதாசுக்கு 87 வயசாகிடுச்சு

அதில்,  பாமக நிறுவனரான ராமதாஸ்க்கு தற்போது 87 வயது ஆகி விட்டது, வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் கட்சியின் நிர்வாக முடிவுகளை உரிய முறையில் எடுக்க முடியாத  நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி சிலர் ராமதாஸை தவறாக வழிநடத்துவதாகவும்,  சில தனி நபர்கள் பாமக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராமதாஸ் தன்னைத்தானே பாமக தலைவராக அறிவித்துக்கொண்டது சட்ட விதிக்கு எதிரானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ராமதாசுக்கு அதிகாரம் இல்லை

எனவே பா.ம.கவின் நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை வழங்கவும் கட்சியின் வழிகாட்டுதல்  மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் கட்சியின் முடிவுகளை எடுக்க பாமகவின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    எனவே ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும்,

பாமக கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை, அதிகாரம் இல்லையெனவும் எனவே ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்புமணி தாக்கல்  செய்த  மனுவுக்கு மார்ச் 11 ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பில் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala Vs EPS : ஜெயில்ல அடைச்சா, பயந்துடுவேனு நினைச்சீங்களா.! இந்த சலசலப்பெல்லாம் எங்கிட்ட செல்லாது- சீறும் சசிகலா
ஜெயில்ல அடைச்சா, பயந்துடுவேனு நினைச்சீங்களா.! இந்த சலசலப்பெல்லாம் எங்கிட்ட செல்லாது- சீறும் சசிகலா
Thiruma TVK: ”ஆமாஞ்சாமிக்கு, விசிலடிப்பது எவ்வளவோ மேல்” திருமாவளவனை தாக்கும் தவெக வாரியர்ஸ்
Thiruma TVK: ”ஆமாஞ்சாமிக்கு, விசிலடிப்பது எவ்வளவோ மேல்” திருமாவளவனை தாக்கும் தவெக வாரியர்ஸ்
பிரிட்ஜ், சிலிண்டர் மாடல்களுடன் நூதனப் பிரச்சாரம்: காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்து அசத்திய அதிமுக வேட்பாளர்!
பிரிட்ஜ், சிலிண்டர் மாடல்களுடன் நூதனப் பிரச்சாரம்: காஞ்சிபுரத்தில் அசத்திய அதிமுக வேட்பாளர்!
யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
Trump on Iran: அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
Embed widget