மேலும் அறிய

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !

காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை ரயில் நிலையங்களிலும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் மார்ச் 1 அன்று ரயில் நிலைய அர்ப்பணிப்பு விழா நடைபெறும்.

மதுரை விழாவில் பிரதமர் மோடி நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்பட்ட காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை அம்ரித் ரயில் நிலையங்களை மக்கள் பயன்பாட்டு அர்ப்பணிக்கிறார்.

ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு
 
நாடு முழுவதும் 1300 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு பயணிகளுக்கு நவீன, பாதுகாப்பான, தூய்மையான வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கலாச்சாரம், தொன்மை, கட்டடக்கலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலைய கட்டடங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் பொம்மிடி, மொரப்பூர், திருவாரூர், பொள்ளாச்சி, காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவல்லிபுத்தூர் ஆகிய 8 ரயில் நிலையங்களில் ரூபாய் 100 கோடி செலவில் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று பயணிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மார்ச் 1 அன்று மதுரையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மதுரை கோட்டத்தில் காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்ட நவீன வசதிகள் பற்றிய தகவல்களை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
காரைக்குடி 
 
செட்டிநாட்டு பகுதி பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலைய கட்டிடங்கள் மற்றும் வெள்ளி வளாகப் பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 18 மீட்டர் அகலத்தில் இரண்டு வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நடைமேடைகளுக்கு எளிதாக மாறிச் செல்லும் வகையில் 6 மீட்டர் அகல புதிய நடை மேம்பாலத்துடன் மூன்று மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 26 கார்கள் நிறுத்து வகையில் 1054 சதுர மீட்டர் அளவிலும் மற்றும் 204 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 3045 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2470 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 391 சதுர மீட்டரில் பயணிகள் ஓய்வு அறை, 350 சதுர மீட்டர் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை, 340 சதுர மீட்டர் உள்வளாக பயணிகள் காத்திருப்பு பகுதி, 459 சதுர மீட்டர் நுழைவாயில் மேற்கூரை, 386 மீட்டர் நடைமேடை சுற்றுச்சுவர், நடைமேடையில் 3060 சதுர மீட்டர் அளவிற்கு புதிய மேற்கூரை, 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், 2 மின்னணு கடிகாரங்கள், 26 ஒலிபெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவையும்  மறுசீரமைப்பில் பொலிவு பெற்றுள்ளன. 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
 
கோவில் மாநகரான ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு எழிலான முகப்புடன் புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. 8 மீட்டர் அகல வரவேற்பு வளைவுகள் கூடிய நுழைவாயில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அருகில் உள்ள நடைமேடைக்கு எளிதாக சென்று வர 2 மின்தூக்கிகள், 8 கார்கள் நிறுத்தும் வகையில் 455 சதுர மீட்டர் அளவிலும், 40 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 560 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 2295 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 108 சதுர மீட்டர்  இரண்டு மாடி கட்டடத்தில் பயணிகள் ஓய்வு அறை மற்றும் தங்கும் அறைகள், 520  மீட்டர் ரயில் நிலைய வளாக சுற்றுச்சுவர், இரண்டு ரயில் பெட்டிகள் நீளத்திற்கு புதிய நடைமேடை மேற்கூரைகள், 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், ஒரு மின்னணு கடிகாரம், 26 ஒலிபெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள், பயணிகள் வசதிகள் உருவ வடிவம் தாங்கிய வழிகாட்டு தகவல் பலகைகள் ஆகிய புதிய வசதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் பயணிகளுக்கு கிடைத்துள்ளன.
 
சோழவந்தான் 
 
சுற்றுப்புற கிராம பொதுமக்களுக்கு பேருதவியாக உள்ள சோழவந்தான் ரயில் நிலைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எழிலான முகப்புடன் புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், பெண்கள் ஆகியோர் அருகில் உள்ள நடைமேடைக்கு எளிதாக சென்று வர 2 மின்தூக்கிகள், 13 கார்கள் நிறுத்தும் வகையில் 250 சதுர மீட்டர் அளவிலும், 42 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 112 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 2797 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 252 சதுர மீட்டரில் பயணிகள் ஓய்வு அறை, 220  மீட்டர்  நடைபாதை மற்றும் கழிவு நீர் வடிகால், 48 சதுர மீட்டரில் பயண சீட்டு அலுவலகம், 215  மீட்டர் ரயில் நிலைய வளாக சுற்றுச்சுவர், 80 மீட்டர் நடைமேடை சுற்றுச்சுவர், இரண்டாவது நுழைவாயில் மேம்பாடு மேலும் 2500 சதுர மீட்டர் வாகனங்கள் நிறுத்தும் பகுதி, 6600 சதுர அடி நடைமேடை பகுதி உயர்த்தப்பட்டு காங்கிரீட் தளம் அமைப்பு, 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், 2 மின்னணு கடிகாரங்கள், 26 ஒலிபெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள்  ஆகியவை சோழவந்தான் பயணிகளுக்கு புதிய நவீன வசதிகளாக கிடைத்துள்ளது. 
 
மணப்பாறை 
 
முறுக்கு தயாரிப்பில் புகழ் பெற்ற மணப்பாறை நகர ரயில் நிலையக் கட்டடம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
 முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நடைமேடைகளுக்கு எளிதாக மாறிச் செல்லும் வகையில் 6 மீட்டர் அகல புதிய நடை மேம்பாலத்துடன் 2 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 13 கார்கள் நிறுத்து வகையில் 250 சதுர மீட்டர் அளவிலும் மற்றும் 252 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 1040 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2797 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 252 சதுர மீட்டரில் பயணிகள் ஓய்வு அறை, 220  மீட்டர்  நடைபாதை மற்றும் கழிவு நீர் வடிகால், 112 சதுர மீட்டர் நுழைவாயில் மேற்கூரை, 80 மீட்டர் நடைமேடை சுற்றுச்சுவர், 215 மீட்டர் ரயில் நிலைய வளாக சுற்றுச்சுவர், 15 மீட்டர் அகல வரவேற்பு வளைவுடன் கூடிய நுழைவாயில், 150 சதுர மீட்டரில் எழிலான முகப்பு பகுதி, 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், 2 மின்னணு கடிகாரங்கள், 26 ஒலிபெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள், பயணிகள் வசதிகள் உருவ வடிவ வழிகாட்டு தகவல் பலகைகள் ஆகியவையும் மணப்பாறை பயணிகளுக்கு கிடைத்துள்ளது.
 
அம்ரித் பாரத் ரயில் நிலைய அர்ப்பணிப்பு விழா நடைபெறும்.
 
காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை ரயில் நிலையங்களிலும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் மார்ச் 1 அன்று மதியம் 2 மணிக்கு அம்ரித் பாரத் ரயில் நிலைய அர்ப்பணிப்பு விழா நடைபெறும். பின்பு மாலை 3 மணிக்கு மதுரை பிரதமர் விழா நிகழ்ச்சியோடு காணொளி இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, பிரதமர் அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை  நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
"இந்தியாவின் முதல் 'ஸ்டாப்-லெஸ்' டோல்கேட்!" – சுங்கச்சாவடி வரிசையில் காத்திருக்க இனி வேலையில்லை
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Sasikumar:
Sasikumar: "சசிகுமார் எனும் ஃபீனிக்ஸ் பறவை.." புகழாரம் சூடிய நந்தன் பட இயக்குனர்!
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
Embed widget