மேலும் அறிய
Garudan Trailer Review : நடிப்பில் மிரட்டும் சூரி..கருடன் பட ட்ரெய்லரின் குட்டி விமர்சனம் இங்கே!
Garudan Trailer Review : விடுதலை படத்திற்கு பிறகு சூரி நடிப்பில் வெளியாகும் கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கருடன் ட்ரெய்லர்
1/6

இயக்குநர் வெற்றிமாறன் கதையில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்த கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார்.
2/6

கருடன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி. விடுதலை படத்தை போலவே இந்த படத்திலும் இவர் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்ட வாய்ப்புள்ளது.
3/6

சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் சில பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை சூரியை நோக்கி வந்து எப்படி முடிகிறது என்பதை கருடனின் கதை.
4/6

படத்தில் சூரி சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "இவன் பேரு சொக்கன்... முரட்டு விசுவாசி" என்ற வசனத்திலேயே சூரியின் கதாபாத்திரத்தை விளக்கியுள்ளனர்.
5/6

ட்ரெய்லரில் சூரி கத்துவது, சாமியாடுவது போன்ற காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷனல் காட்சி அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் இருக்கும் என்பது தெரிகிறது.
6/6

சூரியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படம், வருகின்ற மே 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Published at : 22 May 2024 04:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion