Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
புக்கெட் விமான நிலையத்தை அடைந்த அந்த விமானம், ஓடுபாதையில் தரையிறங்கிய சில நொடிகளில் அதன் முன்பக்க தரை இறக்கக் கருவியில் (Nose Landing Gear) திடீர் பாதிப்பு ஏற்பட்டு விமானம் நிலைகுலைந்து நின்றது.

தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது, அதன் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 131 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நடந்தது என்ன?
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் இயக்கப்பட்டது. திட்டமிட்டபடி
ஓடுதளத்தில் சிக்கிய விமானம் - மீட்பு பணிகள்
சக்கரக் கோளாறு காரணமாக விமானத்தை ஓடுபாதையிலிருந்து நகர்த்த முடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, பயணிகளையும் பணியாளர்களையும் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இந்த விபத்து காரணமாக புக்கெட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய இதர விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
Crash Landing -
— Chaudhary Parvez (@ChaudharyParvez) March 11, 2026
Air India Express confirmed that its #Hyderabad–#Phuket flight on March 11 experienced a nose wheel issue during landing at #PhuketAirport, resulting in a hard landing.
The crew followed all safety protocols and all passengers were safely deplaned. No injuries… pic.twitter.com/3nIm9KoY3q
விமான நிறுவனத்தின் விளக்கம்
இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டவுடன் விமான ஊழியர்கள் தரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட்டதாகவும், ஓடுதளத்திலிருந்து விமானத்தை அகற்றும் பணிகளில் விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடுதளம் சீரமைக்கப்பட்ட பிறகு, புக்கெட் விமான நிலையத்தில் மீண்டும் இயல்பான விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
























