மேலும் அறிய
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
அன்பு சகோதரர் விஜய் மட்டுமல்ல எங்களுடன் யார் வந்தாலும் தோளில் தூக்கி வைத்துகொண்டு கொண்டாடுவோம். - செல்லூர் ராஜு பேட்டி.

செல்லூர் ராஜு
Source : whatsapp
தோழமை என்பது கடைசி நிமிடத்தில் கூட மாறும், எங்களைப் பொறுத்தவரையில் தோழமையை மதிக்கக் கூடியவர்கள்.
யார் கூட்டணிக்கு வந்தாலும் தோளில் தூக்கிக்கொண்டு கொண்டாடுவோம். - செல்லூர் ராஜு.
செல்லுர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
மதுரை மாடக்குளம் பகுதியில் ஆர்.ஓ பிளாண்ட் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"திமுக ஆட்சியில் கஜினி முகமது போல போராட்டம் செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளை ஏற்று மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளனர். இது மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி.திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எது எதற்கோ போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்பவர் எம்.பி.சு.வெங்கடேசன். ஆனால் விமானநிலைய தர உயர்வுக்காக அவர் எதையும் செய்யவில்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட மதுரைக்கு எதையும் செய்யவில்லை. எம்.பி.சு.வெங்கடேசன் திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டார். எந்த நல்லதையும் அவர் செய்யவில்லை. ஆனால் டிவிட்டர் பதிவு மட்டும் போட்டுக்கொள்கிறார்.
தேர்தலுக்காக சர்வதேச விமானநிலையம் கொண்டு வந்தார்கள் மெட்ரோ ஏன் கொடுக்கவில்லை என திமுக பேசுவது குறித்த கேள்விக்கு,
மக்களை ஏமாற்ற திமுக அரசு நாடகம் ஆடுகிறார்கள். மக்களை ஏமாற்ற மத்திய அரசை குறை சொல்கிறார்கள். மத்திய அரசிடம் கேட்டோம் திட்டம் வரவில்லை என திமுக பேசுகிறார்கள். முறையாக திட்டம் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் திட்டம் கிடைக்கும். என் பகுதிக்கு கூட டிபிஆர் கொடுத்து இத்தனை ஆண்டுகளுக்கு பின் திட்டத்திற்கு திமுக அனுமதி கொடுத்தார்கள்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் மாறுவார்களா என்ற கேள்விக்கு.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் மாறுவார்களா என்ற கேள்விக்கு
மோடி ஜி எல்லாம் பார்த்துக்கொள்வார். மேலே இருப்பவருக்கு எல்லாம் தெரியும். மேலே உள்ள மோடி ஜி எல்லாம் பார்த்துக்கொள்வார்.
NDA கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? என்ற கேள்விக்கு
தோழமை என்பது கடைசி நிமிடத்தில் கூட மாறும், எங்களைப் பொறுத்தவரையில் தோழமையை மதிக்கக் கூடியவர்கள்.
யார் கூட்டணிக்கு வந்தாலும் தோளில் தூக்கிக்கொண்டு கொண்டாடுவோம். உச்சி முகந்து அவருக்குரிய பதவியை கொடுப்போம். மதிமுக, பாமகவுக்கு சின்னத்தை அங்கீகரிக்க காரணமே எங்களுடன் தோழமையில் இருந்ததால் தான்.காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் மனமகிழ்சியோடு எங்களோடு பேசுவார்கள். என்னதான் இருந்தாலும் உங்களோடு கூட்டணி இருந்தது போல் இல்லை. ஏதோ கடமைக்காக செல்கிறோம் என்று தான் சொல்கிறார்கள். அவர்கள் கொடுத்த விருந்தை விட நீங்கள் கொடுத்த விருந்து தான் நன்றாக இருந்தது என்கிறார்கள். அன்பு சகோதரர்
விஜய் மட்டுமல்ல எங்களுடன் யார் வந்தாலும் தோளில் தூக்கி வைத்துகொண்டு கொண்டாடுவோம்.
திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது அதிமுகவில் எப்போது தொடங்கும்? என்ற கேள்விக்கு
திமுக கூட்டணியில் தான் வெட்டு குத்து நடக்கிறது. அண்ணா அறிவாலயம் மர்ம மாளிகை போல உள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஊடகங்கள் கூட படம் பிடிக்க முடியவில்லை. எங்கள் கூட்டணி வெளிப்படையான கூட்டணி. அதனால் எல்லாம் வெளியே தெரிந்துவிடும். எங்கள் கூட்டணியை பொறுத்தவரையில் சீட்டு முக்கியமல்ல, எண்ணம் தான் முக்கியம்" என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























