மேலும் அறிய

Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு: 2000 பேர் புதைந்துள்ளதாக ஐ.நா தகவல்..

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் புதைந்துள்ளதாக ஐ நா சபை தெரிவித்துள்ளது. நேற்று வரை 697 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் கிராமமே பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வானது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு வங்க கடலில், ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. இதைச் சுற்றி கடல் பகுதி சூழ்ந்துள்ளதால் தீவாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் , புயல்கள், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் என்கா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல்முறை அல்ல. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். இதனால் சுமார் 3 கிராமங்கள் மண்சரிவில் புதைந்துள்ளதாகவும் 6 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

நேற்றைய நிலவரப்படி சுமார்  697 பேர் இறந்திருப்பதாக ஐ. நா தெரிவித்துள்ளது. இச்செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் வரலாற்றிலே நிகழ்ந்தது கிடையாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இன்று காலை ஐ.நா வெளியிட்ட தகவின் அடிப்படையில் சுமார் 2000 பேர் புதைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நிலச்சரிவு இன்னும் நீடிப்பதாகவும், இதனால் பாதிப்புகள் குறித்தும், நிலச்சரிவில் சிக்கியவர்கள் குறித்தும்  தெளிவான தகவல்களை கிடைப்பதிலும் மீட்பு பணியிலும் சில இடங்களில் தொடர் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு தளத்திற்கு மருத்துவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுக்கள் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Donald Trump:
Donald Trump: "ஈரானில் தாக்குவதற்கு ஒன்னுமே இல்லை!" போர் விரைவில் முடிவுக்கு வருமா? டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Trump Thank Reliance: ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
Embed widget