Putin: உயிருடன் வெட்டப்பட்ட மான்கள்.. மான் கொம்பு இரத்தக்குளியல்.. புற்றுநோய் சிகிச்சை.. ரஷ்ய அதிபர் குறித்து வெளியான ஷாக் ரிப்போர்ட்
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் தொடர்பாக ரஷ்ய பத்திரிகை ஒன்று சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இந்தச் சூழலில் பலரும் ரஷ்ய அதிபர் புதின் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் ரஷ்ய அதிபர் புதின் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் ரஷ்ய பத்திரிகை ஒன்று தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சை செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ப்ரோகெட் என்ற பத்திரிகை ஆய்வு செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்காக அவர் அடிக்கடி மருத்துவர்கள் சிலருடம் ரகசியமாக சோச்சிக்கு பயணம் செய்ததது கண்டறியப்பட்டுள்ளது. இவர் தைராய்டு, புற்றுநோய் நிபுணர்களுடன் தன்னுடைய மருத்துவ பயணத்தை மேற்கொண்டு தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் பயணத்தின் போது இவருக்கு மான் கொம்புகளின் ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தில் இவர் குளித்ததாக கூறப்படுகிறது. அதாவது மான்கள் உயிருடன் இருக்கும்போது இந்த கொம்புகள் வெட்டப்பட்டதாக தெரிகிறது. அந்த கொம்புகளின் ரத்தத்தில் ரஷ்ய அதிபர் புதின் குளித்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பத்திரிகையின் தகவலின் படி 2016-17 ஆண்டுகளில் 5 முறை மருத்துவ பயணம் மேற்கொண்டிருந்த அதிபர் புதின் 2019ஆம் ஆண்டு அதை 9 முறையாக உயர்த்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும் இந்த மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்யா அரசால் ப்ரோகெட் என்ற பத்திரிகை கடந்த ஜூலை மாதம் தடை செய்யப்பட்ட பத்திரிகையாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையில் வேலை பார்க்கும் பலர் வெளிநாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்று ரஷ்ய அரசு கூறியிருந்தது. இந்தச் சூழலில் அந்தப் பத்திரிகை தொடர்ந்து ரஷ்ய அரசு மற்றும் அதிபர் புதின் ஆகியோர் தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் இதுபோன்ற செய்திகள் பல உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மேடையிலேயே உதட்டு முத்தம்..! வில் ஸ்மித்தை மிஞ்சிய ஜிம் கேரி.. பழசை கிளறும் இணையவாசிகள்!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்