மேலும் அறிய

மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் என பரவிய வாட்ஸப் வதந்தி: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

விழுப்புரம் : மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் என பரவிய வாட்ஸப் வதந்தியால் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்.

விழுப்புரம்: மகளிர் உரிமை தொகை பெற மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக வாட்சப் குழுக்களில் தவறான தகவல் பரவியதை தொடர்ந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கிராமங்களை சார்ந்த பெண்கள் விண்ணப்பிக்க திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் மூன்று நாட்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக வாட்சப் குழுக்களில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள திருவெண்னைய் நல்லூர், பெரியசெவலை, திண்டிவனம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகையை விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50 க்கும் மேற்படோர் வருகை புரிந்தனர்.

வருகை புரிந்த பெண்களிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எதற்காக வந்திருக்கிறீர்கள் என கேட்டபோது மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க வந்துள்ளதாகவும் எங்கு நடைபெறுகிறது என கேட்டு போலீசாரையே நமக்கு தெரியாமல் எங்கு நடைபெறுகிறது என சற்று அவர்களை தடுமாற செய்தது.

அதன் பின்னர் போலீசார் மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் எல்லோரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர்ப உரிமை தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு இருபுறமும் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர்...

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகிய அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் இன்று(17.08.2024) விண்ணப்பம் செய்ய முகாம் நடத்தப்படுவதாக தவறான தகவல் சிலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலை உண்மை என நம்பி பொதுமக்கள் எவரும் மேற்படி அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக முகாம் நடத்தப்படுவதாக இருந்தால் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும். மேலும், அரசு துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தவறான தகவல் பரப்புபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Embed widget