மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
விழுப்புரம்: மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
![மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி Villupuram Forest Minister Ramachandran assured that Marakanam Bird Sanctuary will be converted into a tourist destination TNN மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/9c6c9e5583680e6ef092f86d9a21005c1670167849350194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிபாளையம் கழுவெளி பறவைகள் சரணாலயம் அமைய உள்ள பகுதியில் வனத்துறை சார்பில் காடுகள் வளர்த்தல் போன்ற முதல் கட்ட பணிகளை செய்து வருகின்றனர். இங்கு நடைபெற்று வரும் பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை காத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பசுமைத் தமிழகம் திட்டம் ஒன்றாகும். அதேபோல் விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்களை காத்திடும் பொருட்டு வனவிலங்கு சரணாலயங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சதுப்பு நிலம் அமைந்துள்ள பகுதிகளில் புதிய பறவைகள் சரணாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் மரக்காணம் வட்டங்களில் கழுவெளி அமைந்துள்ளது.
இது உவர் நீர் சதுப்பு நிலமாகும். 160க்கும் மேற்பட்ட சிறு நீர்ப்பாசன குளங்களிலிருந்து கழுவெளி வழியாக கடலுக்குச் செல்கிறது. இச்சதுப்பு நிலம் 73.01 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 பிரிவு - 1ன்கீழ் 5151.60.0 ஹெக்டேர் பரப்பளவில் கழுவெளி சதுப்பு நிலம் அமையப்பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய சதுப்பு நிலங்களின் பட்டியலில் ஒன்றாக கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது.
தமிழகத்தில் 16-வது பறவைகள் சரணாலயமாக கழுவெளி பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சரணாலயத்தை மேம்படுத்திடும் பொருட்டும் பாதுகாத்திடும்
பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இமயமலை மற்றும் ஆசிய கண்டங்களிலிருந்து வரும் பறவை இனங்கள் இங்கு தங்கி டிசம்பர் - மார்ச் மாத கால இடைவெளிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இச்சரணாலயம் 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு தாயகமாக உள்ளது. மேலும் 40,000 எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான தங்குமிடமாகவும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. கழுவெளி பகுதியானது பறவைகளுக்கு ஏற்றதான காலநிலை உணவு ஆகிய இந்த இடத்தில் சரியாக அமைந்துவிடுகின்றன. அதேபோல் கழுவெளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரி குளம் குட்டை இருக்கிறது.
மழை நேரத்தில் அவை நிரம்பினால் அந்த தண்ணீர் கழுவெளிக்கு தான் வருகிறது. அங்கிருந்து கடலுக்கு செல்கிறது. இந்த கழுவெளி பகுதியை ஒட்டியபடி விவசாய நிலங்கள் அதிகப்படியாக உள்ளது. இங்கு வரும் பறவைகள் விவசாய நிலங்களில் காணப்படும் தீமை தரக்கூடிய பூச்சி மற்றும் புழுக்களை சாப்பிட்டு விடும். மேலும் பறவைகளின் எச்சம் மிகப்பெரிய உரமாக தாவரங்களுக்கு அமைகிறது. மேலும் இச்சரணாலயத்தை பாதுகாத்திடும் வகையிலும் விரிவுபடுத்திடும் வகையிலம் மத்திய அரசிடமிருந்து நிதிஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. வரப்பெற்றவுடன் பெரிய அளவிலான பறவைகள் சரணலாயமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதுமட்டுமல்லாமல் இப்பகுதியினை காத்திடும் பொருட்டு கழுவெளியிலிருந்து நீரினை எடுப்பது, கழிவுநீரினை இப்பகுதியில் விடுவது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இச்சரணாலயத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இச்சரணாலயத்தை பெரிய அளவில் மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்தலமாக மாறும் அதன் மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)