GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW : குஜராத் ஜெயண்ட்ஸ் (GG) அணி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 மூன்றாவது போட்டியில் UP வாரியர்ஸை (UPW) எதிர்கொள்கிறது.

குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் அணிகள் அடுத்த WPL 2025 போட்டியில் மோதத் தயாராகி வரும் நிலையில், GG vs UP போட்டியை எப்போது, எங்கே, எப்படிப் பார்ப்பது என்பது பற்றி இங்கே காண்போம்.
குஜராத் ஜெயண்ட்ஸ் (GG) அணி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 மூன்றாவது போட்டியில் UP வாரியர்ஸை (UPW) எதிர்கொள்கிறது. தீப்தி சர்மா தலைமையிலான யு.பி வாரியர்ஸ் அணி, கடந்த ஆண்டு எட்டு போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்த சீசனை சிறப்பாகத் தொடங்குவதில் உறுதியாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் 201 ரன்கள் எடுத்த போதிலும், குஜராத் அணி அந்த போட்டியில் தோல்வியுற்றது.
பிட்ச் எப்படி?
இது வரை இந்த மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலுமே சேசிங் செய்த அணிகளே வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு அணி 201 ரன்களை சேஸ் செய்தது. அடுத்து நடந்த இரண்டாவது போட்டியிலும் டெல்லி அணியும் சேஸ் செய்து வெற்றி பெற்றது. அதனால் டாஸை வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும்.
இந்த போட்டி வதோதராவின் கோடாம்பி மைதானத்தில் நடைபெறுகிறது..
போட்டி தொடங்கும் நேரம்:
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
எதில் காணலாம்?
இந்த போட்டியை இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பப்படுகிறது, மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கிலும் இப்போட்டியை காணலாம்.
இரு அணிகள்
குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி: பெத் மூனி(வ), லாரா வால்வார்ட், தயாளன் ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர்(கேட்ச்), டியான்ட்ரா டாட்டின், சிம்ரன் ஷேக், ஹர்லீன் தியோல், தனுஜா கன்வர், சயாலி சத்கரே, பிரியா மிஸ்ரா, காஷ்வீ கௌதம், மேக்னா சிங், மன்பீல்ட் லீபிட்ச், டேனியல் லீபிட்ச், ஷப்னம் எம்டி ஷகில், பிரகாஷிகா நாயக், பார்தி ஃபுல்மாலி
UP வாரியர்ஸ் மகளிர் அணி: சாமரி அதபத்து, விருந்தா தினேஷ், கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா(c), உமா செத்ரி(w), சோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, கிராந்தி கவுட், சைமா தாகூர், கிராந்தி கவுட், சைமா தாகூர், ராஜேஸ்வரி கௌடேல்ட், குஹெர்ஷேல் ஹென்றி, அலனா கிங், ஸ்வேதா செஹ்ராவத், பூனம் கெம்னார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

