Villupuram: திமுக பெண் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி - விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கொலை வழக்கில் கணவர் பெயர் சேர்க்கப்பட்டதாக கூறி திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.
விழுப்புரம்: கொலை வழக்கில் கணவர் பெயர் சேர்க்கப்பட்டதாககூறி திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த அணிச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் ஆரோவில் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் வினோத் ராஜ் இவரை புதுச்சேரியை சேர்ந்த ரவுடிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்தனர். இந்நிலையில் விமல் ராஜ் நேற்று முன்தினம் வழக்கம் போல ஆரோவில் அருகே உள்ள அவர் வேலை செய்யும் ஹோட்டலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவரை வழிமறித்த மர்ம கும்பல் அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த விமல் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கோட்டகுப்பம் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர். ஐந்துபேரில் திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரான கலைஞர் (எ) நாகராஜ் ஒருவர். இந்நிலையில், தன் கனவருக்கும் கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் காவல்துறையினர் திட்டமிட்டு தன் கணவர் பெயரை வழக்கில் சேர்த்துள்ளதாக கூறி திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் துர்காதேவி குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முன்றார். மேலும் ஆட்சியர் அலுவலக வாயின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு பாதுக்காப்பில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். உடனடியாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். மேலும் அனைவரையும் தாலுக்கா காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கணவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டதாக கூறி திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்