விழுப்புரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்
வானூர் அருகே 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்
விழுப்புரம்: வானூர் அருகே 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை வானூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் (வயது 38) கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதற்கு திருவக்கரை பள்ளியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் விழுப்புரம் அழைத்து சென்றார். அங்கு மகேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பள்ளி மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகேஸ்வரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடத்திய போது அவர் மேலும் பல மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசி மற்றும் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சில மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக பணி நீக்கம்
அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்போனில் ஆபாச படம் காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன்(40) பொதுமக்களால் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்து பின்னர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவு
போக்சோ சட்டம் என்றால் என்ன?