மேலும் அறிய

Bus Strike: விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர், 758 கிராமப்புற பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கனிமசமான எண்ணிக்கையிலும் திருச்சி, மதுரை, சென்னை, கடலூர் போன்ற நகரங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விழுப்புரத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர் பேருந்துகளும் கிராமபுறபேருந்துகள் 758 இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் கோட்டத்தில் மட்டும் வேலை நிறுத்தம் காரணமாக 50 சதவிகித பேருந்துகள் பணிமனைகளிலிருந்து போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.

Bus Strike: விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர், 758 கிராமப்புற பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கனிமசமான எண்ணிக்கையிலும் திருச்சி, மதுரை, சென்னை, கடலூர் போன்ற நகரங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் பணிமனையில் உள்ள 234 அரசு பேருந்துகளில் 110 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கபட்டுள்ளது மற்ற பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் பணியில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் போக்குவரத்து பணிமனை முன்பாக 6 அம்ச கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பு பஞ்சப்படி வழங்குவதற்கான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் தமிழக அரசின் மெத்தன போக்கால் தான் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பேருந்துகளின் விபரம் 

  • தலைநகர் சென்னையில் 97 சதவீதம் பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது மொத்தம் இயக்கப்படவேண்டிய மூன்று ஆயிரத்து  233 பேருந்துகளில், மூன்று ஆயிரத்து 129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • விழுப்புரம் மண்டலத்தில் மொத்தம் 84 சதவீத பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 8 மணி நிலவரப்படி கால அட்டவணைப்படி இயக்கப்படவேண்டிய மொத்தம் இரண்டு ஆயிரத்து 52 பேருந்துகளில் ஆயிரத்து 724 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சேலம் மண்டலத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது மொத்தம் இயக்கப்படவேண்டிய ஆயிரத்து 101 பேருந்துகளில் ஆயிரத்து 79 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஆனால் மொத்தம் இயக்கப்படவேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 138 பேருந்துகள் எனவும், மொத்தம் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

  • கோவை மண்டலத்தைப் பொறுத்தவரையில் ஐந்து சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. அதாவது 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இயக்கப்படவேண்டிய இரண்டாயிரத்து 51 பேருந்துகளில் ஆயிரத்து 952 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget