மேலும் அறிய

திருவண்ணாமலை: அம்மணி அம்மன் மடத்தை இடித்த இடத்தினை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குழு

அம்மணி அம்மன் மடத்தையும் அறநிலையத்துறையினர் இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை அறிந்து இந்து முன்னணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள அம்முனி அம்மன் மடத்தை இடித்த விவகாரத்தில் இடிக்கப்பட்ட இடத்தினை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு கோபுரம் அருகில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தை பா.ஜ.க. ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் என்பவர் ஆக்கிரமித்து செய்து அந்த இடத்தில் இரண்டு அடுக்கு மாடிகளை கொண்ட வீடு மற்றும் அலுவலகம் கட்டி அனுபவித்து வந்துள்ளார். மேலும் அம்மணி அம்மன் மடத்தில் உள்ள அறைகளை மேல் வாடகைக்கு விட்டு அந்த மடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்வுப்படி மடத்தின் இடத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த அவரது வீடு மற்றும் அலுவலகத்தை மார்ச் மாதம் 18-ந் தேதி இந்து சமய அறநிலையத் துறையினர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் வருவாய் துறையினருடன் இணைந்து இடித்து அகற்றினர். அந்த சமயத்தில் அம்மணி அம்மன் மடத்தையும் அறநிலையத்துறையினர் இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை அறிந்து இந்து முன்னணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 

திருவண்ணாமலை: அம்மணி அம்மன் மடத்தை இடித்த இடத்தினை ஆய்வு செய்த சென்னை  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குழு

அதன் பிறகு 19- ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்ட சங்கர் அவரது ஆதரவாளர்களுடன் வந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அரசு அலுவலர்களை பணி செய்யாமல் தடுத்து அரசு சொத்துக்களை சேதப்படுத்தி அரசு அதிகாரிகளையும் காவல்துறையினரையும் தகாத வார்த்தைகளால் பேசியது குறித்து கோவில் இணை ஆணையர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகி சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்பட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை: அம்மணி அம்மன் மடத்தை இடித்த இடத்தினை ஆய்வு செய்த சென்னை  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குழு

அதனையடுத்து சங்கர் தரப்பினர் அவரது ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி அம்மணி அம்மன் மடத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு உள்ளதா? மடம் இடிக்கப்பட்டு உள்ளதா? எதற்காக மடம் இடிக்கப்பட்டது? முறையான அனுமதியுடன் இடிக்கப்பட்டதா? என்று விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் நேற்று திருவண்ணாமலைக்கு நேரில் வந்து அம்மணி அம்மன் மடம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி, மடத்தில் இடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு அளவீடு செய்து, புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் அவர்கள் அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று ஆணையர் குமரேசனிடம் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். இதுகுறித்து அந்த குழுவினரிடம் கேட்டபோது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை நடத்தப்பட்டது என்றும் அதற்கான அறிக்கையை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
Rinku Singh: அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
AQI Index :  சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
முதல் குழந்தை பெத்துக்கிட்டா 5K.. இரண்டாவது குழந்தைக்கு 6K.. பெண்களுக்கு அள்ளி கொடுக்கும் பாஜக!
கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000.. பெண்கள்தான் டார்கெட்.. அள்ளி கொடுக்கும் பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
UGC Ban: அச்சச்சோ... இந்த 3 பல்கலைக்கழகங்களும் டிகிரி வழங்கத் தடை; யுஜிசி அதிரடி!
Rinku Singh: அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?
AQI Index :  சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
முதல் குழந்தை பெத்துக்கிட்டா 5K.. இரண்டாவது குழந்தைக்கு 6K.. பெண்களுக்கு அள்ளி கொடுக்கும் பாஜக!
கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000.. பெண்கள்தான் டார்கெட்.. அள்ளி கொடுக்கும் பாஜக!
Special Train: சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான தகவல்!
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Embed widget