மேலும் அறிய

Rinku Singh: அரசியல்வாதியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.. அட யாருப்பா அது?

கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் வென்று, இளம் வயதில் மக்களவைக்கு தேர்வான பிரியா சரோஜ், கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன ரிங்கு சிங் ஆகிய இருவருமே உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் திருமணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக திகழ்பவர் தோனி. தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு அப்படியொரு பினிஷர் இதுவரை கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்து வந்தது. அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர் ரிங்கு சிங்.

ரிங்கு சிங்குக்கு விரைவில் திருமணம்?

நெருக்கடியான நேரத்தில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் தேவை என்ற நிலையில் 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு, ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான ரிங்கு சிங், தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடிவருகிறார்.

இவரின் ஆட்டத்தை பார்த்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர், இவரை பாராட்டி வருகின்றனர். கடந்தாண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கூட இந்திய அணியின் மாற்று வீரராக இருந்தார்.

இந்த நிலையில், நாட்டின் இளம் பெண் எம்.பி.க்களில் ஒருவரான பிரியா சரோஜை, ரிங்கு சிங் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.

யார் இந்த பிரியா சரோஜ்?

மச்சாலி ஷஹர் தொகுதி எம்.பி.யான பிரியா சரோஜ், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். மூன்று முறை எம்.பி.யாகவும், தற்போது எம்.எல்.ஏ.வாகவும் உள்ள துபானி சரோஜின் மகள்தான் பிரியா சரோஜ். அரசியலுக்கு வருவதற்கு முன், வழக்கறிஞராக இருந்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு, முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரியா சரோஜ், பாஜக வேட்பாளர் பி.பி. சரோஜை 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நாடாளுமன்ற உறுப்பினரானார். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இளம் எம்பி என்ற பெருமையும் இவரையே சாரும். டெல்லி பல்கலைக்கழகத்தில் BA பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் LLB பட்டமும் பெற்றுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Embed widget