AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : காற்றின் தரம் சிறப்பாக உள்ள இந்தியா நகரங்களில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

பல இந்திய நகரங்கள் காற்று மாசுபாடு அதிகரித்து காற்றின் தரம் குறைவதையும் கண்டு வருகின்றன. இதுபோன்ற நேரங்களில், பலர் தங்கள் நகரத்தை விட சிறந்த காற்றின் தரம் உள்ள இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்த நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வியாழன் அன்று(17.01.25) 241 இந்திய நகரங்களில் மாசு அளவு பட்டியலை வெளியிட்டது.
திருநெல்வெலி முதலிடம்:
இந்த நிலையில் சுத்தமான காற்றைக் கொண்ட நகரங்களில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திருநெல்வெலியில் காற்றின் தரக் குறியீடு 33 ஆக இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் 5வது இடத்தில் இருக்கிறது, அங்கு காற்றின் தரக் குறியீடு 47 ஆக உள்ளது. இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் நாகர் லகுன் 2வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: Jailer 2 BTS : டூப்புன்னு நெனச்சியா.. ஒரிஜினல் கண்ணா.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜெயிலர் -2 மேக்கிங்
சுத்தமான காற்றுள்ள 10 இந்திய நகரங்கள்
- நெல்லை (தமிழ்நாடு)
- நஹர்லாகன் (அருணாச்சல பிரதேசம்)
- மடிகேரி (கர்நாடகா)
- விஜயபுரா (கர்நாடகா)
- தஞ்சாவூர் (தமிழ்நாடு)
- கொப்பல் (கர்நாடகா)
- வாரணாசி (உத்தரபிரதேசம்)
- ஹூப்ளி (கர்நாடகா)
- கண்ணூர் (கேரளா)
- சால் (சத்தீஸ்கர்)
காற்றின் தரம் மோசம்:
காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களின் பட்டியலையும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தலைநகர் டெல்லி முதல் இடத்தையும், உத்தர பிரதேசத்தின் காசியபாத் 2வது இடமும், மேகலாயாவின் பிரின் ஹெட் நகரம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
காற்றின் தரம் மோசமாக உள்ள 10 நகரங்கள்:
- டெல்லி
- காசியாபாத் (உத்தரபிரதேசம்)
- பைரனிஹாட் (மேகாலயா)
- சண்டிகர் (பஞ்சாப்)
- ஹபூர் (உத்தர பிரதேசம்)
- தனபாத் (ஜார்க்கண்ட்)
- பாடி (ஹிமாச்சல பிரதேசம்)
- கிரேட்டர் நொய்டா (உத்தர பிரதேசம்)
- குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா)
- நொய்டா (உத்தர பிரதேசம்)
காற்றுத் தரக் குறியீடு கண்ணோட்டம்
காற்றுத் தரக் குறியீடு (AQI) என்பது காற்று எவ்வளவு மாசுபடுகிறது என்பதைக் காட்ட அரசு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். மாசு அதிகரிக்கும் போது, AQI உயர்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கல் சுவாசம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தேசிய காற்றுத் தரக் குறியீடு (AQI) காற்றின் தரம் மற்றும் அதன் ஆரோக்கியமான காற்று எவ்வாறு உள்ளதை ஆறு வகைகளாக பிரிக்கிறது:
- 0-50: நல்லது/பாதுகாப்பானது
- 51-100: திருப்திகரமானது
- 101-200: மிதமான மாசுபட்டது
- 201-300: காற்றின் தரம் மோசமாக உள்ளது
- 301-400: காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது
- 401-500: அபாயக்கட்டத்தில் உள்ளது






















