EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
நீட் தேர்வு குறித்த அச்சத்தால், திண்டிவனம் மாணவி தற்கொலைக்கு திமுக அரசே முழு பொறுப்பு எனக் கூறி, காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, நீட் தேர்வு அச்சத்தால் மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த மரணத்திற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி
திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமதாஸ் - கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களது மூன்று பிள்ளைகளில், இரண்டாவது மகள் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண்களோடு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார்.
அப்போது, நீட் தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளார். தொடர்ந்து 2-வது ஆண்டாக வீட்டிலிருந்தே பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று ஓபிசி சான்றிதழை அவரது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் அந்த மாணவியிடம் அளித்துவிட்டு விவசாய வேலைக்காக சென்றுள்ளனர்.
மாலை மீண்டும் வீடு திரும்பியபோது, அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், செய்வதறியாமல் உடலை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில், இதனை அறிந்த வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் பெண்ணின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கும் இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை நீட் ரகசியத்தை சொல்லாமல், மாணவர்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசுதான், இந்த மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளா.
அதோடு, அந்த நீட் ரகசியத்தை #Daddy_Son உடனடியாக சொல்ல வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 3, 2025
இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து
மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.…





















