மேலும் அறிய

இந்தாண்டின் சிறந்த ஜோக்.. முதல்வர் ஸ்டாலின் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நான் பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி தி.மு.க.வை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 20-ஆம் தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்  நில மோசடி ஆகிய வழக்குகளில்  ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கு பிறகு ஜெயக்குமாருக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார்.

இந்தாண்டின் சிறந்த ஜோக்.. முதல்வர் ஸ்டாலின் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில்  டி.ஜெயக்குமார் வந்தார். அவரை வாசலில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்த இன்ஸ்பெக்டர் சேரன் அங்கேயே நோட்டில் கையெழுத்து வாங்கினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்தனர். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்தியிட்டார். முன்னாள் அமைச்சர்கள் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் காவல் நிலையத்துக்கு முன்பு கூடியிருந்த கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் திமுக தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் தொடர்ந்து மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு பணம், நகை ஏதும் சல்லி காசு கூட கைப்பற்றாமல் அதை கைப்பற்றியதாக  குறிப்பிடுவது பொய் என குற்றம்சாட்டினார்.

இந்தாண்டின் சிறந்த ஜோக்.. முதல்வர் ஸ்டாலின் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மேலும் ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக திமுக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதற்கு நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்து இடுகிறேன். நான் பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை  என்றார். மேலும் ஜெயக்குமார் வாய மூட முடியாது, அதேபோல் ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூடமுடியாது என்றார். இந்தியாவின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என குறிப்பிடுகிறார்களே என்ற கேள்விக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் ஸ்டாலின் என குறிப்பிட்டார். திமுகவை கெளரவர்கள் ஆட்சி என்றும் அதிமுக பாண்டவர்கள் ஆட்சி பாராளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Embed widget