விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
Premalatha Vijayakanth: "ஜனவரி 9-ஆம் தேதி தேமுதிக சார்பில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி"

விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது விஜய் குரல் கொடுக்கவில்லை நலம் விசாரிக்கவில்லை, ஆனால் விஜயகாந்த் என் அண்ணன் என விஜய் கூறுகிறார் இது உலகம் அறிந்த உண்மை, என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரக்க சொல்லி உள்ளார் அதுதான் உண்மை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் மக்கள் சந்திப்பு கூட்டம்
செங்கல்பட்டு அருகே தேமுதிக சார்பில் விஜயகாந்தின் உள்ளம் தேடி இல்லம் நாடி தொகுதி மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ரத யாத்திரை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு நடையாத்திரை செய்து சிறப்புரை ஆற்றினர். அவருடன் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் வருகை புரிந்தார். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக செங்கல்பட்டில் கிரேன் மூலம் கட்சி நிர்வாகி ஒருவர் தொங்கிக்கொண்டு விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரத யாத்திரை சென்று ராட்டின கிணறு ஊரை சென்றது. தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சித் தொண்டர்கள் முன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எத்திராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது என்ன ?
இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், செங்கல்பட்டில் இன்று கேப்டன் விஜயகாந்தின் ரத யாத்திரையும், உள்ளம் தேடி இல்லம் நாடி என்கிற இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வந்துள்ளேன், 234 தொகுதிகளிலும் நான் நேரடியாக சென்று மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன், போகிற இடமெல்லாம் மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவு அளித்து வரவேற்கின்றனர். விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு கொடுக்க இருக்கின்றோம்,
தற்போது முதல் கட்ட சுற்று பயணத்தை தொடங்கி உள்ளோம், மக்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சி வரவேற்ப்பு உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டில், அவர்கள் விருப்பபடக்கூடிய தலைவர்களின் புகைப்படங்களை வைக்கின்றனர். அது அவர்களுடைய விருப்பம், அவர் விஜயகாந்தை அண்ணன் என்று கூறுகிறார்கள் நாங்கள் விஜயை தம்பி என்று கூறுகிறோம்.
சீமான் கூறியது உண்மை
வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி தேமுதிக சார்பில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளம், அந்த மாநாட்டில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதையும் கூட்டணி குறித்து உறுதியாக சொல்ல இருக்கிறோம். விஜய் பற்றிய கேள்விகளை அவரிடம் தான் கேட்க வேண்டும், அதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு, விஜய் குரல் கொடுக்கவில்லை.
அவர் உடல் நலம் சரியில்லாத போது விஜய் குரல் கொடுக்கவில்லை. இப்போது ஏன் விஜயகாந்த் என் அண்ணன் என கூறுகிறார் என பேசி வருகிறார், உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்க சொல்லி உள்ளார் அதுதான் உண்மை, விஜயகாந்தை அண்ணன் என அவர் கூறுகிறார் அவரை தம்பி என நாங்கள் கூறுகிறோம் என தெரிவித்தார்.




















