மேலும் அறிய

Sterlite: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்தில் காடுகளை வளர்க்க தன்னார்வலர்களை அழைக்கும் ஸ்டெர்லைட்

பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவிலான பல்லுயிர் பூங்கா உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 

தாமிர உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டும், அதன் 2023 ஆம் ஆண்டிற்கான நோக்கமாக "பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல்" என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் "முத்து நகர் பல்லுயிர் பூங்கா" திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியது.

Sterlite: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்தில் காடுகளை வளர்க்க தன்னார்வலர்களை அழைக்கும் ஸ்டெர்லைட்

இந்த அடிக்கல் நாட்டும் விழாவிற்கு தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி, பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பால சுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Sterlite: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்தில் காடுகளை வளர்க்க தன்னார்வலர்களை அழைக்கும் ஸ்டெர்லைட்

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்படவுள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் டை-மெத்தில்-சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை நடுதல் முதற்கட்ட திட்டமாகும்.

அடுத்தகட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த உள்ளது.மேலும் சரணவன் ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். 

Sterlite: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்தில் காடுகளை வளர்க்க தன்னார்வலர்களை அழைக்கும் ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசுகையில், ”இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும் என்றும், இந்த ஆலை ஆரம்பித்த நாள் முதல் திருவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் சேவை செய்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.

பசுமை தூத்துக்குடி என்ற திட்டம் 2019 ஆம் ஆண்டு 10 லட்சம் மரங்கள் நடும்s திட்டத்தை முன்னெடுத்து 1.25 இலட்சத்தை அடைந்துள்ளது. இந்த பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35% காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள்  + 91 8870477985 அலைபேசி எண்ணிலோ, Sterlite.communication@vedanta.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Breaking News LIVE: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
DMK Protest: இன்னும் சற்று நேரத்தில்! நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget