மேலும் அறிய

திருவாரூரில் மழையால் வேரோடு சாய்ந்த பருத்தி செடிகள் - விவசாயிகள் கவலை

சூறாவளி காற்று அடித்ததில் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் ஆன பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த நிலையில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன. 
 
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு கடுமையான சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் உட்பட மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சூறாவளி காற்று அடித்ததில் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் ஆன பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
பருத்தி பயிரிட்டு 70 முதல் 90  நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகளாக உள்ளது. முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் பத்து நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகள், நேற்றைய சூறாவளி காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன. குறிப்பாக பருத்திச் செடிகள் பல இடங்களில் வேரோடு சாய்ந்துள்ளது. திருவாரூர் அருகே கானூர், கள்ளிக்குடி, தென்ஓடாச்சேரி, அக்கரை ஓடாசேரி, வடபாதிமங்கலம், செருவாமணி, விக்கிரபாண்டியம், ஆகிய பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 80 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் மழையால்  வேரோடு சாய்ந்த பருத்தி செடிகள் - விவசாயிகள் கவலை
 
இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையில் பருத்தி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து பருத்திச் செடிகள் அழுகி இருந்தன. அதனை தண்ணீரை வடிய வைத்து உரம் வைத்து பாதுகாத்தோம் அத்தகைய இடர்பாட்டில் தப்பி பிழைத்த பருத்தி செடிகளில் இருந்து முதல் சுற்று பஞ்சு எடுக்க வேண்டிய நிலையில், சூறாவளி காற்று அடித்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஏற்கனவே மழைநீர் சூழ்ந்து அழுகிய போதும் மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி செடி குறித்த கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த நிலையில் இரண்டாவது முறையாக சூறாவளி காற்று அடித்து பருத்திச் செடிகள் முழுமையான சேதமடைந்துள்ளன. எனவே இதுகுறித்த கணக்கெடுப்பை நடத்தி தமிழக அரசு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget