மேலும் அறிய

தஞ்சாவூரில் பல வீடுகளில் திருடியவர்கள் மைசூரு வனப்பகுதியில் கைது - 50 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் மீட்பு

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, கர்நாடாக மாநிலம் மைசூர்  வனப்பகுதியில் பதுங்கி கொள்வார்கள். இது குறித்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு நான்கு மாதங்களாக பூட்டை உடைத்து உள்ளே திருடிய நபர்களை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா தலைமையிலான தனிப்படை தனிப்படை உதவி  ஆய்வாளர் ராஜேஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்  மோகன், தலைமை காவலர் உமாசங்கர் மற்றும் காவலர்கள் கௌதம், அருண்மொழிவர்மன், அழகுசுந்தரம் மற்றும் நவீன் ஆகிய போலீசார் சிசிடிவி பதிவு மற்றும் ரகசிய தகவலின் படி முக்கிய குற்றவாளியான, தென்காசியை சேர்ந்த சத்திரம், மாடசாமிபனவடளி சேர்ந்த மாடசாமி மகன் கொடுங்கசாமி (55) என்பவரை கர்நாடக மாநிலம் மைசூர் அருகே ஒரு வனப்பகுதியில் வளைத்துப் பிடித்தது.  அவனுடன் அவனுடைய கூட்டாளியான பெங்களூர் மாநிலம், ஹசவல்லி, வாசாலிரோட்டை சேர்ந்த  மோகன் மகன் மோகன்குமார் (39)  என்பவரையும் கைது செய்ததுள்ளனர்.

தஞ்சாவூரில் பல வீடுகளில் திருடியவர்கள் மைசூரு வனப்பகுதியில் கைது - 50 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் மீட்பு

மேலும் கொடுங்கசாமிக்கு அடைக்கலம் கொடுத்த தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் சேர்ந்த மாணிக்கம் மகன் தியாகராஜன் என்கின்ற சொட்டை தியாகராஜன் (55)  என்பவர், தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வாடகைக்கு ஒரு வீடு எடுத்து நான்கு மாதங்களாக நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்த திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை, புதுக்கோயில், பெரியார் நகரை சேர்ந்த வேலு மகன் நாகராஜன் என்ற பூனை நாகராஜ் (47), என்பவரை  கைது செய்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் பகுதி மற்றும் வல்லம் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு பதினைந்து வீடுகளை உடைத்து தெரியவந்தது.

தஞ்சாவூரில் பல வீடுகளில் திருடியவர்கள் மைசூரு வனப்பகுதியில் கைது - 50 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் மீட்பு

மேலும் திருட்டு சம்பவத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  கொடுங்கசாமி என்பவர் மீது தமிழகம் முழுவதும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.  இவனுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு  திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல் மோகன்குமார் மற்றும் பூனை நாகராஜ் ஆகியோர் மீது, தலா 10 வழக்குகள் மேல் நிலுவையில் உள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 50 பவுன் தங்க நகைகளும், ரூ. 5 லட்சம் ரொக்கப்பணமும்கைப்பற்றப்பட்டது. மேலும், இவர்கள் தமிழகத்தில் வேறு மாவட்டங்களில் திருடியுள்ளார்களா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் பல வீடுகளில் திருடியவர்கள் மைசூரு வனப்பகுதியில் கைது - 50 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் மீட்பு

இது குறித்து போலீசார் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் வீட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவத்தை வைத்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தமிழகம் முழுவதும் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தை வைத்து, விசாரணையில் ஈடுபட்டோம். இந்த திருட்டு வழக்கில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை பற்றி விசாரணை செய்த போது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, கர்நாடாக மாநிலம் மைசூர்  வனப்பகுதியில் பதுங்கி கொள்வார்கள். இது குறித்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் மைசூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்களை கைது செய்தோம். அவர்களிடமிருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Embed widget