மேலும் அறிய

அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து செங்கிப்பட்டியில் விசிக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

செங்கிப்பட்டியில் அமித்ஷாவின் புகைப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்: அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் மாநிலங்களவையில் மத்திள உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்தும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, செங்கிப்பட்டி, கும்பகோணத்தில் சிபிஎம் மற்றும் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, எஸ்.பாலகிருஷ்ணன், கு.பெஞ்சமின், என்.கந்தசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு நிறைவுரையாற்றினார். 

ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி (பேராவூரணி), பாஸ்கர் (திருவோணம்), மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் ஏ.மேனகா மற்றும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடைக்கமிட்டிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோ‌ரியு‌ம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து செங்கிப்பட்டியில் விசிக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இதேபோல் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் அமித்ஷாவின் புகைப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் தமிழன் தலைமை வகித்தார்.  

ஆர்ப்பாட்டத்தில் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன் கண்டன கோஷங்களை எழுப்பினார். மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் மலர்கொடி, ஒன்றிய செயலாளர்கள் செந்தில் சிலம்பரசன், ராஜ்குமார், இளங்கோ, ரமேஷ், நாகத்தி வினோத், அரசு வணங்காமுடி, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சண்.செல்வகுமார் மற்றும் பலர் பேசினர்.

இதில் திருவையாறு நகரச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய பொருளாளர் பாலையா, தொழிலாளர் விடுதலை முன்னணி அறிவுக்கரசு, திருவையாறு நகர பொருளாளர் கார்த்திக்,ஒன்றிய துணைச் செயலாளர் வல்லம் புதூர் துரைராஜ்,ஒன்றிய பொருளாளர் தனியரசு, குருவாடி பட்டி முகாமைச் சேர்ந்த அந்தோணி ராஜ்,ஜோசப் ராஜ், குணசேகரன், இளையராஜா, மகளிர் அணியைச் சேர்ந்த மணிமேகலை, சந்திரா,நிர்மலாராணி,மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் செய்திருந்தார்.

கும்பகோணம் அருகே பாபநாசம் ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் டாக்டர் அம்பேத்கரை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாபநாசம் ரயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ஜனசதாப்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ரயில் மறியல் போராட்டத்தில் பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசுபதிவளவன், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்டக்குடி ஜெய்க்குமார், பாபநாசம் நகர செயலாளர் யோவான், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்வளவன், நில உரிமை மீட்பு மாநில செயலாளர் வீர வெற்றி வேந்தன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள் இனியவன், செந்தில்வளவன், அம்பிகாபதி, அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் உசைன், சுவாமிமலை நகர செயலாளர் மகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை பாபநாசம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget