மேலும் அறிய

காரை ஆம்புலன்ஸாக மாற்றிய காங்கிரஸ் நிர்வாகி!

பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்காக காங்கிரஸ் பிரமுகர், தனது காரைஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய ஆம்புலன்சாக மாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தவர் மகேந்திரன். 44 வயதான மகேந்திரன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள குக்கிராமங்களிலும் கடுமையான பாதிப்பை கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காரை ஆம்புலன்ஸாக மாற்றிய காங்கிரஸ் நிர்வாகி!

போக்குவரத்து சேவையும் முடங்கியிருந்த காரணத்தாலும், கொரோனா அச்சத்தாலும் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அருகில் இருப்பவர்கள் யாரும் முன்வரவில்லை. பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளும் முறையாக கிடைக்காத காரணத்தாலும், தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் காரணத்தாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, மகேந்திரன் தனது சொந்த காரான மகேந்திரா எஸ்.யூ.வி. சொகுசு காரை, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் ஆம்புலன்சாக மாற்றியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே அவரது காரில் பிரத்யேகமாக ஆக்சிஜன் சிலிண்டரையும் பொருத்தியுள்ளார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்கு செல்வது என்றால் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, சில தனியார் வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தாமரன்கோட்டை கிராமத்தில் 60 வயது பெண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு எந்தவித வாகனங்களும் ஏற்பாடு செய்ய இயலாத காரணத்தால் அவர் உயிரிழந்தார் என்றும் மகேந்திரன் கூறினார்.

காரை ஆம்புலன்ஸாக மாற்றிய காங்கிரஸ் நிர்வாகி!

மேலும். இந்த கார் ஆம்புலன்சை ஓட்டுவதற்காக 28 வயதான முத்து என்ற இளைஞரையும் மகேந்திரன் நியமித்துள்ளார். முத்து தனது காரில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச்செல்வதால் அவருக்காக தனியாக அறை ஒன்றையும், முகக்கவசம், சானிடைசர், கொரோனா பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் மகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.

காரை ஆம்புலன்ஸாக மாற்றிய காங்கிரஸ் நிர்வாகி!

கொரோனா மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்படும் மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வேளச்சேரி எம்.எல்.ஏ. எம்.எச்.ஹாசனிடம் இரு தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்துதருமாறும் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ பணம் மட்டும் போதாது, மனம் இருந்தாலும் போதும் என்பதை தான் இது போன்ற உதவிகள் உணர்த்துகிறது. இதே போன்று அந்தந்த பகுதிகளில் வசிப்போர் ஒருவருக்கொருவர் உதவ முன்வந்தால், எத்தனை அலை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் மக்களுக்கு வரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget