மேலும் அறிய

TN Budget 2023: பெரும்  எதிர்பார்ப்பு...தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்.. மகளிருக்கான உரிமை தொகை கன்ஃபார்ம்? மற்றது என்னென்ன?

தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்:

குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது தான், பொதுமக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு அதிகரிக்க காரணமாக உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.  

திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வந்தனர். இதற்கு மத்தியில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில்  பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார். 

இதையடுத்து, உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள்:

அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு  வெளியிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நெல் கொள்முதல் விலை, மின்சார கட்டணம், புதிய பாடத்திட்டம், கேஸ் மானியம் என பல்வேறு எதிர்பார்ப்புகளும் பொதுமக்களிடையே நிலவுகிறது.

சுமார் 2 மணி நேரத்திற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

வேளாண் பட்ஜெட்:

இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திமுக அரசை எதிர்த்தும், தமிழகத்தில் நிலவும் சட்ட-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப  எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரிவாக பதில் அளிப்பார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget