low pressure Over Andaman: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் - சென்னை வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக, இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும். நாளை, தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அடுத்த சில நாட்களில், இது சூறாவளிப் புயலாக வலுபெறும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்கு காணப்பட்டது. இதற்கு, புவி வெப்பம் தொடர்பான வளிமண்டல அளவுருக்கள் காரணமாக உள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவிவெப்பமயமாவதன் காரணமாக, உலக கடற்பரப்புகளில், சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரித்து காணப்படுகிறது.
சமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடிய இந்த அதிகரிப்புக்கு, அதிக ஈரப்பதம், குறிப்பாக வளிமண்டலத்தில், பலவீனமான செங்குத்து காற்று, மற்றும் சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம். இது, சூறாவளியை அதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவி வெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறது என காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை நிபுணர்கள் தங்கள் ஆய்வில் விளக்கியிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
ஹெக்டேருக்கு 20,000 போதாது; ஏக்கருக்கு 20,000 வேண்டும் - முன்னாள் அமைச்சர் காமராஜ் கோரிக்கை
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில், 909 ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டியது 891 ஏரிகள்..