TN Headlines Today: ஜூலையில் DMK Files 2ஆம் பாகம் ரிலீஸ்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு வெளியீடு..இன்றைய 3 மணி செய்திகள்..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
![TN Headlines Today: ஜூலையில் DMK Files 2ஆம் பாகம் ரிலீஸ்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு வெளியீடு..இன்றைய 3 மணி செய்திகள்..! tamil nadu latest headlines today may 12th tn politics latest news from abp nadu TN Headlines Today: ஜூலையில் DMK Files 2ஆம் பாகம் ரிலீஸ்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு வெளியீடு..இன்றைய 3 மணி செய்திகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/e144cae1b7ad99157ff0214a5cda0e111683884087345572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- ஜூலை மாதம் DMK Files 2ம் பாகம் ரிலீசாகும் - மீண்டும் பரபரப்பை ஏற்றிய அண்ணாமலை..!
தி.மு.க. அரசின் அமைச்சர்களின் சொத்து பட்டியலை தி.மு.க.பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த அண்ணாமலை தி.மு.க. பைல்ஸ் பாகம் 2 ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டதற்கு எங்களது பாராட்டை தெரிவித்து , வரவேற்கிறோம். புதிய அமைச்சர் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- மோக்கா புயல் தாக்கம்; தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை..! உங்க ஏரியா நிலவரம் எப்படி?
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோக்கா” புயலானது மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 5.30 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இதனால் மே 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது - பீகார் மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பீகார் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என குறிப்பிட்டார். வட இந்தியா, தென் இந்தியா மக்களின் இணக்கத்தால் தான் இந்தியா ஒற்றுமையாக உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க
- அதிக நிறுவனங்களை வைத்திருப்பதால் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளதோ? - அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நேற்று பதவியேற்றார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “டி.ஆர்.பி ராஜா குடும்பத்தினர் அனைத்து துறையிலும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தான் அவருக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க
- நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு; தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை இந்த தேர்வுகளை 16,60,511 மாணவ, மாணவியர்கள் எழுதினர். தேர்வு முடிவுகலை https://testservices.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வு முடிவுகளைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)