மேலும் அறிய

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிடைத்தது முக்கிய அனுமதி.. அடுத்து இதுதான் நடக்கப் போகுது.. போராடும் மக்களின் நிலை ?

Parandur Site Clearance: பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, தள அனுமதியை வழங்கியது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

பரந்தூர் பசுமை விமான நிலையம் - parandur greenfield airport

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் (parandur greenfield airport)  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிடைத்தது முக்கிய அனுமதி.. அடுத்து இதுதான் நடக்கப் போகுது.. போராடும் மக்களின் நிலை ?

அனுமதி வழங்கி அரசாணை

கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்

இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர்,எடையார்பாக்கம்  கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலைய அமைவிடத்திற்கு கிடைத்தது அனுமதி

விமான நிலையம் அமைப்பதற்கு முதலில் இடத்திற்கு அனுமதி ஒப்புதல் பெறுவது அவசியம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்திற்கான தள அனுமதி வேண்டி தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகத்தால் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பரந்துர் விமான நிலையம் அமைவதற்கான, விமான நிலைய அமைவிடத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. 

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிடைத்தது முக்கிய அனுமதி.. அடுத்து இதுதான் நடக்கப் போகுது.. போராடும் மக்களின் நிலை ?

புதிய விமானம் அமைப்பதற்கான தள அனுமதி வழங்கியது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம். 9 துறைகள் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் படி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, தள அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவில் விமான போக்குவரத்து, ராணுவம் மற்றும் விமானப்படை துறை, வானிலை துறை ஆகியவை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளன.

அடுத்து என்ன நடக்கப் போகிறது ?

பரந்தூர் விமான நிலையம் சுமார் 32,707 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பரந்தூர் விமான நிலையம் பணிகள் 4 கட்டமாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பொழுது ஆண்டிற்கு நூறு மில்லியன் பயணிகளை கையாள முடியும். முதல் கட்ட பணிகள் ஜனவரி 2026ல் துவங்கி டிசம்பர் 2028 இல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பறந்தூர் விமான நிலையத்தில் 2046 வரை பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Embed widget