தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளராக பொறுப்பேற்று கொண்டார் செல்வராஜ்..!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளராக செல்வராஜ் பொறுப்பேற்று கொண்டார்.

கடந்த டிசம்பர் 2ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதில், பேரூராட்சிகள் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் ஆர். செல்வராஜ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
View this post on Instagram
இந்தநிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளராக செல்வராஜ் பொறுப்பேற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளராக பொறுப்பேற்று கொண்ட ஆர். செல்வராஜ் பூக்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.செல்வராஜ் வாழ்த்து பெற்றபோது செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் உடன் இருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

