OPS: எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலினுக்காக ட்வீட் போட்ட ஓபிஎஸ்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். @mkstalin அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) July 13, 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று உடற்சோர்வு சற்று இருந்தது, அதை தொடர்ந்து பரிசோதித்ததில் கொரோனா தொற்று #COVID19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
மேலும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க : இலங்கையில் உச்சக்கட்டம் - சூழ்ச்சியும் புரட்சியும் வெல்லப்போவது யார் - கூர்நோக்கு பார்வை!
கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்