Jayalalithaa Death Case: ‛அரசு சொன்னதால் தான் சிசிடிவியை அகற்றினோம்’ -ஜெ., சிகிச்சை: அப்போலோ வாதம்!
Jayalalithaa Death Case: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளதாகவும், விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்கு கசியவிடப்படுகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளது.
அதிமுக அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்து சிசிடிவியை அகற்றினோம் என்று உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலிதாவுக்கு பிரவேசி தேவைப்படுவதாக அரசு கூறியதால் அகற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி அப்போலோவின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
#BREAKING | ஜெ.மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது அப்போலோ மருத்துவமனை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுhttps://t.co/wupaoCQKa2 | #AIADMK | #jayalalithaa | #supremecourtofindia | #Apollo pic.twitter.com/NIUZufzejm
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
மேலும், ஆறுமுகசாமி ஆணையம் முன் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்த அப்போலோ, இந்த ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் டாக்டர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது. ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர் குழு உதவி இல்லாமல் ஆணையம் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளதாகவும், விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்கு கசியவிடப்படுகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதத்திட்டார்.
மேலும் செய்திகள் படிக்க:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை மைனர் லேங்குவேஜாக அறிவித்தது தேவையற்ற செயல் - அன்பில் கண்டனம்https://t.co/abts4Np4CK
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
எதிர் கட்சியாக பாய்ந்த திமுக... ஆளுங்கட்சியாக பம்மியதா...? ஆளுநருக்கு ரிப்போர்ட் தர சம்மதம்!https://t.co/UcgjZQEip3#DMK #TNGovernor #RNRavi #CMMKStalin
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
”சிறந்த நடிகருக்கான விருது ஏன் கிடைக்கல“ - தேசிய விருது பெற்றும் அதிருப்தியில் பார்த்திபன்!https://t.co/eYEQRfXuuG#NationalFilmAwards #Parthiban #oththaseruppu
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்