IT Raid: சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனர் வீட்டில் வருமான வரி சோதனை - குறி வைக்கப்படும் இடங்கள்..!
IT Raid: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
IT Raid: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோபாலபுரத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. கே.கே. நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வருமான வரித்துறை சோதனைகள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கூட அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகங்கள் மட்டுமின்றி அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சோதனைகள் அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.