மேலும் அறிய

ஒரே வருடத்தில் விவாகரத்து நடிகர் கிருஷ்ணா 2-வது திருமணம்”புதிய ஆரம்பம்...!” Actor Krishna

நடிகர் கிருஷ்ணா காதல் மனைவி ஹேமலதா தன்னை சந்தேகப்பட்டு நடிக்க விடாமல் டார்ச்சர் செய்ததாக கூறி  திருமணம் செய்த, 16 மாதத்தில் விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார்.

அலிபாபா திரைப்படத்தின் மூலம் 2008-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான கிருஷ்ணா முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டப்பட்டார். இதை தொடர்ந்து கழுகு யாமிருக்க பயமே யாக்கை போன்ற 20-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது வரை முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க, தொடர்ந்து போராடி வரும் கிருஷ்ணா, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருஷ்ணா கடந்த 2014-ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பிரமாண்டமாக மேட்டுப்பாளையத்தில் நடந்த நிலையில், திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கிருஷ்ணா மனைவியோடு வடபழனியில் வீடு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில்... இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, காரணமாக இருவரும் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற முடிவெடுத்தனர். மனைவி தன்னுடைய கடமையை செய்ய தவறியதோடு, தன்னை சந்தேகப்பட்டு நடிக்க விடாமல் டார்ச்சர் செய்ததாக கிருஷ்ணா கூறி இருந்தார். அவர் தன் சக்திக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை படுவதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தன்னை பலமுறை தாக்கி தனக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து கிருஷ்ணா மற்றும் ஹேமலதா இருவரும் 2016-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது. விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கிருஷ்ணா, பிரபல நடிகையை காதலிப்பதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன் கிசுகிசு எழுந்தது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என கிருஷ்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது கிருஷ்ணா விவாகரத்து பெற்று 9 ஆண்டுகளுக்கு பின்னர், தன்னுடைய 47 வயதில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். இதனை புகைப்படம் வெளியிட்டு கிருஷ்ணா சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தாலும் மணமகள் யார்? என்பது பற்றி ரிவீல் செய்யவில்லை. இதுவும் காதல் திருமணம் என்றே கூறப்படும் நிலையில், கிருஷ்ணா திருமணம் செய்து கொண்ட காதலி திரைத்துறையை சேர்ந்தவரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.  கிருஷ்ணாவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில், கோவிலில் நடந்துள்ளதால்... இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget