DMK Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...அறிவிப்பை வெளியிட்ட தலைமை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
DMK Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அதேபோல துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுகவைச் சேரந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
எதற்கு?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை, தேர்தல் பணிகள், சிறப்பாக செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல்:
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே தமிழகத்தில் 38 தொகுதிகளை வென்றுவிட்ட நிலையில், இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் வெற்றி தொகுதிகள் குறைந்துவிடக் கூடாது என்றும் அப்படி குறைந்தால் அது ஆட்சி மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை காட்டிவிடுவதாக அமைந்துவிடும் என்றும் திமுகவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க