மேலும் அறிய

Chidambaram Temple Issue: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வு முயற்சிகள் தோல்வி; விரக்தியுடன் சென்ற அதிகாரிகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு நாட்கள்  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் ஆய்வை  முடிக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வந்தன. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள் நடராஜ், லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதியும் நேற்று காலை 10 மணிக்கு கோயிலுக்குள் வந்தார். 

Chidambaram Temple Issue: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வு முயற்சிகள் தோல்வி; விரக்தியுடன் சென்ற அதிகாரிகள்

அவர்களுக்கு பாதுகாப்பாக கடலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்பி அசோக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். கோயிலுக்கு வந்ததும் அதிகாரிகளை தீட்சிதர்கள் விபூதி பிரசாதம் கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கோயில் கனகசபை மீது அவர்களை ஏற்றி சாமி தரிசனம் செய்து வைத்தனர். இதையடுத்து தாங்கள் கோயிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தீட்சிதர்களின் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

Chidambaram Temple Issue: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வு முயற்சிகள் தோல்வி; விரக்தியுடன் சென்ற அதிகாரிகள்

இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் நின்றபடி ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும், ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து இந்து சமய அறநிலையத் துறையிடம் உள்ள கோப்புகளை படித்துப் பார்த்தனர். தொடர்ந்து 1 மணியில் இருந்து 4 மணி வரை கோயில் நடை பூட்டப்படும் என்பதால், அதிகாரிகள் உணவு இடைவேளைக்காக வெளியே சென்றனர். மீண்டும் ஆய்விற்காக மாலை 5 மணிக்கு மேல் வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் காலையில் கூறிய பதிவான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Chidambaram Temple Issue: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வு முயற்சிகள் தோல்வி; விரக்தியுடன் சென்ற அதிகாரிகள்

மேலும் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வுக்கு வந்தால் மட்டுமே ஆய்வு ஒத்துழைப்பு தருவோம் என தெரிவித்தனர். இதனால் மீண்டும்  ஆலோசனையில் ஈடுபட்ட  அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை காத்திருந்து ஆய்வை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் இரண்டு நாட்கள் கண்டிப்பாக ஆய்வு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று கூறி நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆய்வுக்காக  கோயில் உள்ளே சென்ற அதிகாரிகள் சாமி தரிசனம் செய்த பின்னர் தீட்சிதர்களிடம் கணக்கு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கேட்டனர். அதற்கு பதிலளித்த தீட்சிதர்கள் கோயில் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் தற்போது ஊரில் இல்லை எனவும், அவர்கள் சென்னைக்கு சென்றுள்ளதாக கூறினர்.  

Chidambaram Temple Issue: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வு முயற்சிகள் தோல்வி; விரக்தியுடன் சென்ற அதிகாரிகள்

அதனை அடுத்து அதிகாரிகள் கோயில் வளாகத்தில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் மதியம் உணவிற்காக வெளியில் சென்ற அவர்கள் மீண்டும் 4.30 மணியளவில் கோயிலுக்கு வந்து மீண்டும் தீட்சிதர்களிடம் ஆவணங்களை வழங்குமாறு கேட்டனர். அதற்கு கோயில் செயலர் ஊரில் இல்லாததால் வழங்க இயலாது என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளாமல் நிறைவு செய்தனர். ஒரு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், தொடர்ந்து 2 நாட்களாக தீட்சிதர்கள் முறை ஆவணங்களை வழங்க மறுத்து ஒத்துழைப்பு வழங்காததால் ஆய்வை முழுமையாக நடத்த முடியாமல் திரும்ப செல்கிறோம். இதுகுறித்த அறிக்கையை இந்து சமய அறநிலை துறை ஆணையரிடம் கொடுத்து மேற்கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரூஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரூஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரூஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரூஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
Embed widget