(Source: ECI/ABP News/ABP Majha)
Ambur Biryani Festival: கனமழை எதிரொலி - ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்தியால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை தொடங்க இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து காலை முதல் சர்ச்சை எழுந்த நிலையில், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற வரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, ஏலகிரி மலை, புதூர்நாடு மலை, ஜவ்வாதுமலை தொடர், ஆண்டியப்பனூர் அணை ஆகியவை புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறப்புகள் ஆகும். அதேபோல ஆம்பூர் பிரியாணியும் இம்மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது. இந்திய அளவில் ஆம்பூர் பிரியாணிக்கு தனி மவுசு உண்டு என்றால் அது மிகையாகாது. இதனால் ஆம்பூரில் பிரியாணி திருவிழாக நடக்க திட்டமிடப்பட்டது.
#BREAKING | பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு!https://t.co/wupaoCQKa2 | #briyani #ambur #amburBriyani pic.twitter.com/8mY5uYRYpa
— ABP Nadu (@abpnadu) May 12, 2022
ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்படும் என்று திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்திருந்தார். மேலும், திருவிழாவில் 'பீப்' எனப்படும் மாட்டிறைச்சி பிரியாணியை தவிர, அனைத்து வகையான பிரியாணிகளும் விழாவில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி பிரியாணி மட்டுமே வழங்கப்படும். அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை அனுமதிக்காவிட்டால், விழா நடைபெறும் வளாகத்தின் முன் பீப் பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என விசிக, எஸ்டிபிஐ, மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏபிபி நாடு இணைய செய்தி நிறுவனத்திடம் பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதற்கு பின்னணியில் சங்பரிவார் அமைப்புகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு சமூகவலைத்தளங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசு சார்பில் நடக்க இருந்த ஆம்பூர் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதியில்லை என்று கூறியதற்கு பிறகு, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதையெடுத்து கனமழையை காரணம் காட்டி ஒத்துவைத்துள்ளது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்