Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Vikram Sugumaran Passed Away: மதயானை திரைப்பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikram Sugumaran Passed Away: இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கடைசியாக தேரும், போரும் படத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென வந்த நெஞ்சு வலி:
கதிர், ஓவியா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற, மதயானை கூட்டம் படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தரமான படத்தை வழங்கி இருந்தாலும், அடுத்தடுத்து படங்கள் அமையாமல் இருந்தார். சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான், மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்ப புறப்பட்டார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்து விழுந்த விக்ரமை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்ரம் சுகுமாரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த விக்ரம் சுகுமாரன்:
கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியை சேர்ந்த விக்ரம், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்துள்ளார். பாலு மகேந்திரா பட்டறையில் சேர்ந்து 1999 முதல் 2000ம் ஆண்டு வரை சினிமா கற்றுக்கொண்டார். பின்னர் வெற்றிமாறனுடன் பயணித்து, அவர் இயக்கிய பொல்லாதவன் படத்தில் சிறு வேடம் ஏற்று நடித்தார். இருப்பினும் இயக்குனராக வேண்டுமென்ற கனவோடு தொடர்ந்து பயணித்து, வெற்றி மாறனின் தேசிய விருது வென்ற ஆடுகளம் படத்தில் வசனகர்த்தாவாக செயல்பட்டார். இந்த அனுபவங்களை எல்லாம் திரட்டி, கடந்த 2013ம் ஆண்டு அவரது இயக்கத்தில் மதயானை கூட்டம் எனும் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.
#Madhayaanai Director #VikramSugumaran allegations..!! 👇 pic.twitter.com/InzsG8LJDv
— Authority (@Boxoffice_Boom) November 7, 2024
ஏமாற்றிய சினிமா
நல்ல படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் சிரமமே என்ற கூற்றிற்கு விக்ரம் சுகுமாரனும் விதிவிலக்கல்ல. தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த அவரது இயக்கத்தில், 10 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு சாந்தனு நடிப்பில் இராவண கோட்டம் திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த படம் பெறவில்லை. இந்நிலையில், ”தேரும் போரும்” எனும் படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த விக்ரம் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
முதுகில் குத்திய நண்பர்கள்:
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்ரம், சினிமா துறையை சேர்ந்த சிலர் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஆனா, அவற்றை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் இல்லாததால் அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை” என வேதனை தெரிவித்து இருந்தார். இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், நடிகராகவும் சினிமாவில் எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என கடைசி வரை போராடி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த விக்ரம் சுகுமாரனுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





















