RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
IPL 2025 RCB Vs PBKS Final: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையையே வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

IPL 2025 RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பை முடித்து முதல் கோப்பையை வெல்லப்போவாது யார் என்பது? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை பந்தாடிய பஞ்சாப்:
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூருவை, எதிர்கொள்ளப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ருத்ரதாண்டவமாட, 19 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி இரண்டாவது முறையாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, நாளை நடைபெற உள்ள நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் 2025 ஃபைனல் - பெங்களூரு Vs பஞ்சாப்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். பெங்களூரு அணி ஏற்கனவே மூன்று முறையும் பஞ்சாப் அணி ஏற்கனவே ஒரே ஒரு முறையும் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. ஆனால், அந்த வாய்ப்புகளில் இந்த அணிகள் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் இதுவரை கோப்பையையே வெல்லாத ஒரு அணி புதிய அணி சாம்பியனாக உள்ளது.
18 வருட காத்திருப்பு ஓவர்:
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியபோது மொத்தம் 8 அணிகள் இருந்தன. அதில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறையும், கொல்கத்தா மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளன. டெக்கான் சார்ஜர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன. அண்மையில் ஐபிஎல் போட்டியில் இணைந்த குஜராத் அணி கூட ஒருமுறை கோப்பையை வென்று வெட்டது. ஆனால், ஆரம்பம் முதலே ஐபிஎல் போட்டிகளில் உள்ள பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியுள்ளதால், 18 வருட காத்திருப்பு முடிந்து ஏதோ ஒரு அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளது.
பெங்களூரு Vs பஞ்சாப் -நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 36 முறை நேருக்கு நேர் மோதி, தலா 18 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளே கோப்பையை வென்றுள்ளன. அந்த வகையில் பெங்களூரு அணி முதல் கோப்பையை கைப்பற்றுமா? அல்லது கடந்த ஆண்டு கொல்கத்தாவிற்கு கோப்பையை வென்றது போல இந்த முறை பஞ்சாபை ஸ்ரேயாஸ் சாம்பியனாக்குவாரா? என்பாது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது.



















